இன்றைய காலகட்டங்களில் ஆபாச இணையதளங்களை சிறுவயது குழந்தைகள் காணக்கூடிய நிலையில் இருப்பது குறித்து தான் மிகவும் வருந்துவதகவும், இதுகுறித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே இங்கிலாந்து அரசு அதிரடியாக எடுக்கும் எனவும் பிரதமர் கேமரூன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய்போது குறிப்பிட்டுள்ளார்.இணையதளங்கள் உபயோகிக்கும்போது, ஆபாச இணையதளங்களை சிறுவர்கள் காணாத வண்ணம் தடை செய்வதில் பெற்றோர்கள் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் என கூறிய அவர், ஆபாச இணையதளங்கள்
வயது குறைந்த சிறுவர்கள் காண இயலாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறித்தியுள்ளார். சிறுவயதிலேயே ஆபாச இணையதளங்களை காணும் குழந்தைகளின் மனதில் பலவித இருட்டான எண்ணங்கள் தோன்றக்கூடிய அபாயங்கள் இருப்பதால், இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்க தன்னுடைய அமைச்சரவை மிகவும் தீவிரமாக செய்ல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இணையதளங்கள் பயன்படுத்தும் அனைவரும் automatic block எனப்படும் ஆபாச இணையதளங்களை திறக்க இயலாத தடை materialகள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படவேண்டும் எனவும். இதனால் குழந்தைகள் இவ்வகையான இணையதளங்கள் பார்ப்பதை குறைக்கலாம் எனவும் இணையதள வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக