தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.12.12

படகோடு கவிழ்ந்து 55 ஆபிரிக்க அகதிகள் பரிதாப மரணம்


சோமாலியாவில் இருந்து புறப்பட்ட அகதிகள் படகொன் று அளவுக்கு அதிகமான ஆட்களுடன் பயணித்து ஏடன் முனைப்பகுதியில் கவிழ்ந்துள்ளது.இந்த அனர்த்தத்தில் 55 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது, இதுவரை 23 உ டலங்கள் மீட்கப்பட்டுள்ளன மிகுதி 32 சடலங்களும் தே டப்படுகிறது, ஐந்துபேர் உயிர் தப்பியுள்ளனர்.ஏடன் மு னைப்பகுதியில் பெருந்தொகையான அகதிகள் கடலில் மூழ்கிய சம்பவம் 2011 ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே அ திகமாகும் என்று யூ.என்.எச்.சி.ஆர்
தெரிவித்துள்ளது, எதி யோப்பிய நாட்டவரும், சோமாலியரும் இதில் இருந்துள்ளனர்.
இது இவ்விதமிருக்க டென்மார்க்கில் அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டவர்கள் சொந்த நாடு திரும்புவதை ஊக்குவிக்க அவர்களுக்கு வழங்கப்படும் பணம் அதிகரிக்கப்படுகிறது.
இதுவரை தாமாகவே தாயகம் திரும்பும் பெரியோருக்கு 3793 குறோணரும், சிறுவருக்கு 1896 குறோணரும் வழங்கப்பட்டது, இனி பெரியோருக்கு 20.000 குறோணரும், சிறியோருக்கு 10.000 குறோணரும் வழங்கப்படும், கட்டாயமாக திருப்பி அனுப்பப்பும்வரை காத்திருக்காமல் தாமாகவே போக விரும்பினால் இந்த வாய்ப்புண்டு.
மேலும் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டவர்கள் கட்டாயமாக திருப்பி அனுப்பப்படுவது கடந்த மூன்று வருடங்களாக வேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த 2009 ல் 510 பேர் கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டார்கள் ஆனால் இந்த ஆண்டு 1407 பேர் இதுவரை பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.
வட ஆபிரிக்காவில் குளவிக்கூட்டில் கல்லெறிந்தது போல போர்கள், உள்நாட்டு கலவரங்கள் ஆரம்பித்துவிட்ட காரணத்தால் புற்றீசல்போல அகதிகள் ஐரோப்பா நோக்கி படையெடுக்கிறார்கள், டென்மார்க்கிலும் இதன் தாக்கம் பெரிதாக உள்ளது.
தற்போது ஐரோப்பிய வட்டகையில் சிரிய அகதிகளின் எண்ணிக்கை வரம்பற்று பெருகிச் செல்கிறது.
அதேவேளை அகதிகள் மட்டுமல்ல அல் குவைடா பயங்கரவாத அமைப்பின் தலைவலியும் ஐ.நாவின் மண்டையைக் குடைந்தபடியுள்ளது.
ஆபிரிக்க மாலி நாட்டின் வடபகுதி அல்குவைடா படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது, ஐ.நாவுக்கு பெரும் சவாலாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற ஐ.நாவின் பாதுகாப்பு சபை வாக்கெடுப்பில் பங்கேற்ற 15 நாடுகளும் மாலியில் இருந்து பயங்கரவாத படையை விரட்டியடிக்க ஆகவேண்டிய அத்தனை காரியங்களையும் செய்யும்படி கேட்டுள்ளன.
மாலி அரசும் சிறீலங்கா அரசு போல பயங்கரவாத அரசாக இருந்தாலும் அரசுக்கு எதிரான பயங்கரவாதமே முதலில் ஒழிக்கப்பட வேண்டுமென்ற பாதுகாப்புச் சபையின் கொள்கையை இது உணர்த்துகிறது.
மறுபுறம் தெற்கு சூடானில் மறுபடியும் திருவிழா ஆரம்பித்து அங்குள்ள ஆயுதக் குழுக்கள் ஆளையாள் சுடுபட்டதில் 12 பேர் மரணிக்க மக்கள் தலைதெறிக்க ஓட ஆரம்பித்துள்ளார்கள்.

0 கருத்துகள்: