அல்ஜீரியா பிரான்சின் காலனித்துவ நாடாக இருந்த கா லத்தில் நடைபெற்ற மானிடப் படுகொலைகளுக்கும், ம னித குலத்தின் வாழ்வியலுக்கு முரணாக பிரான்சிய ப டைகள் நடாத்திய காட்டுத் தர்பாருக்கும் பிரான்சிய அதி பர் ஒலந்த மன்னிப்பு கோரியுள்ளார்.அல்ஜீரியாவிற்கா ன இரண்டு தினங்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற் கொண்டு அந்த நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றி யபோது அல்ஜீரியாவில் பிரான்சின் 132 வருட காலனித் துவ ஆட்சியின்
அலங்கோலங்களுக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.இதேபோல
ருவாண்டாவில் நடைபெற்ற மானிடப் படுகொலை களின் பின்னாலும் பிரான்ஸ்சின் கரங்கள் இருந்ததாகவும், ஐ.நா களமிறங்க முடியாமல் போனமைக்கு அதுவும் ஒரு காரணமென சந்தேகிக்கும் நூல்களும் அவ்வப்போது வெளியாகி வருவது கவனிக்கத்தக்கது.அலங்கோலங்களுக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.இதேபோல
இதுபோல ஆர்மீனியாவில் சிறீலங்கா வன்னியில் நடாத்தியது போல பாரிய மானிடப்படுகொலைகளை நடாத்தி ஏப்பம்விட்டுவிட்டு துருக்கி பேய்குஞ்சு வேடம் போடுவதும் அடிக்கடி உலகின் முன் வந்து போகிறது.
இது ஒருபுறமிருக்க ஸ்பானிய அரசு இன்று மொத்தத் தேசிய வருமானத்தில் 4.5 வீதத்தை வெட்டி 290 பில்லியன் குறோணர்களை மீதம் பிடிக்கும் திட்டத்தை முன்வைக்கிறது.
இதன் காரணமாக வைத்தியசாலைகள், பாடசாலைகள் பெரும் பாதிப்பை சந்திக்க இருக்கின்றன, மேலும் வேலையிழந்து உதவிப்பணம் பெறுவோருக்குரிய கொடுப்பனவு ஆறு வீதம் வெட்டப்படுகிறது, பென்சன் எடுப்போரின் பணமும் வெட்டுதலுக்கு உள்ளாகிறது, அத்தோடு அனைத்து மந்திரிகளும் தமது செலவில் 20 வீத குறைப்பு செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான எதிர்ப்பு ஆர்பாட்டம் சென்ற வாரம் நடந்து முடிந்துவிட்டது.
இந்த வாரம் மறுபடியும் ஸ்பானியாவில் பாரிய ஆர்பாட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது, ஆனால் ஆர்பாட்டங்களால் தீர்க்க எதுவும் இல்லை ஏனென்றால் ஸ்பானியாவின் கல்லாப் பெட்டியில் எலி படுத்திருக்கிறது.
மேலும் அமெரிக்க வெளிநாட்டு துறை மீது சென்ற வாரம் முன் வைக்கப்பட்ட விமர்சன அறிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க இராஜதந்தரிகளின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த எரிக் போஸ்வெல் பதவி விலகியுள்ளார், மேலும் பதவி விலகாமல் ஒட்டிக் கொண்டிருக்கலாம் என்று எண்ணிய மூன்றுபேர் கட்டாய லீவில் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
லிபிய பெங்காஸி நகரத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதலில் அமெரிக்க கொன்சலேற் தர தூதுவரும் மேலும் மூவரும் கொல்லப்பட்ட பின்னணி தொடர்பான ஆய்வறிக்கையே இந்தப் பதவி விலகல்களுக்குக் காரணமாகும்.
அமெரிக்க வெளியுறவுத்துறை விழிப்பாக செயற்பட்டிருந்தால் இந்த மரணங்களை தவிர்திருக்கலாம் என்பது தெரிந்ததே, ஆனால் இந்த ஆய்வறிக்கை அதிபர் தேர்தல் முடிந்த பின்னர் அம்பலத்திற்கு வந்திருப்பது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக