தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.12.12

பிரான்சிலும் இங்கிலாந்திலும் அதிகரிக்கும் வறுமை


பிரான்ஸ் அரசு அந்நாட்டில் அதிகரிக்கும் வறுமைக் கு பரிகாரம் காணுமுகமாக ஏழ்மையை போக்க உத வும் கொடுப்பனவுகளை பத்து வீதத்தால் உயர்த்தவு ள்ளதாக அறிவித்துள்ளது.பிரான்சில் வாழும் 16 – 25 வயதுக்கு இடைப்பட்ட இளையோரில் நால்வருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வறுமைக்குள் வாழ்ந் து வருகிறார்கள்.மேலும் ஐரோப்பாவின் மற்றைய நாடுகளில் உள்ளதைப்போலவே வறுமையின் பரந் துபட்ட வளர்ச்சி
பிரான்சிய சமுதாயத்திலும் பெரு வளர்ச்சி கண்டுள்ளது.தற்போது ஆட்சியில் இருப்பது சோசலிச அரசாங்கம் என்பதால் முன்னைய அரசாங்கங்கள் போல ஏழைகளைப் பற்றி கவலையற்ற ஆட்சி செய்யாமல் மனம் மாறியுள்ளது.
பிரான்சில் எஸ்.யூ எனப்படும் பாடசாலைக்கல்வி கொடுப்பனவு கிடையாது ஆனால் சட்டத்தரணி படிக்கும் 22 வயது யுவதி ஒருவர் கூறும்போது வெறும் 2400 குறோணர் உதவியுடன் வீட்டு வாடகையும் பெற்று பெற்றோருடன் வாழ்வதாகக் கூறினார்.
இதேபோல பிரிட்டனிலும் நிலமைகள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன, கடுமையான மீதம் பிடித்தல்கள் வருட ஆரம்பத்தில் அமலுக்கு வர இருக்கின்றன.
இலண்டன் மத்திய பகுதியில் வசிக்கும் பெருந்தொகையான ஏழைகள் வடக்கு லண்டன் நோக்கி வலுக்கட்டாயமாக புலம்பெயர வேண்டிய நெருக்கடிகள் சிக்குண்டுள்ளனர்.
மத்திய இலண்டனில் வீடுகளின் வாடகை வகைதொகையின்றி அதிகரிக்க இருப்பதால் இந்த வெளியேற்றம் தவிர்க்க இயலாத விடயமாகப்போகிறது, உதாரணமாக வெஸ்ற் கென்ஸ்சிங்ரனில் இருக்கும் ஒரு கொகுதி மக்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட இருக்கிறார்கள்.
இங்கிலாந்தில் அமலுக்கு வரும் பொருளாதார வெட்டு கத்தரிக்கோல் ஏழ்மை நிலையில் உள்ள வெளிநாட்டவர் வாழ்வில் பாரிய நெருக்குவாரத்தை ஏற்படுத்தப் போவதாக அஞ்சப்படுகிறது.
மறுபுறம் இத்தாலிய தலைவர் பலர்ஸ்கோனிக்கும், ஜேர்மனிக்கும் இடையே கடும் முறுகல் ஏற்பட்டுள்ளது, ஜேர்மனியை கடுமையாக விமர்சிக்கும் பலர்ஸ்கோனிக்கு ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதகமான பலவீனத்தை நுட்பமாக பயன்படுத்தி கடன் வழங்கி, கட்டுப்பாடு போட்டு தந்திரமான சுரண்டலை ஜேர்மனி நடாத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜேர்மனியின் ஆசீர்வாதத்துடன் ஆட்சிக்கு வந்த பிரதமர் மரியோ மென்ரியையும் குற்றம் சுமத்தினார், மரியோ மொன்ரி ஆட்சிக்கு வர முன்னர் இத்தாலியின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தது, இப்போது அதுவும் இல்லாமல் போய்விட்டதாகக் குறை கூறியுள்ளார்.
ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலுக்கு கிரேக்கத்தில் உண்டாகியிருக்கும் எதிர்ப்புப் போல ஓர் எதிர்ப்பை இத்தாலியிலும் உருவாக்கி, ஒரு தேசிய வீரன் போல வேடமணிந்து வெற்றிவாகை சூட ஊழல் பேர்வழியான பலர்ஸ்கோனி வகுத்த இற்றுப்போன பொறிக்கிடங்திற்குள் ஜேர்மனி விழுந்துவிட்டதை உணர முடிகிறது.
மறுபுறம் இன்று எஸ்.ஏ.எஸ் விமான சேவை தனது 1.5 பில்லியன் சுவீடிஸ் குறோணர்களுக்கான மீதம் பிடித்தல் திட்டத்தை முன் வைத்துள்ளது.
இன்னொரு உலகத் தலைவரான 94 வயதுடைய நெல்சன் மண்டேலா இதயத்தில் இன்பெக்சனுக்கு ஆளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2010 உலகக் கிண்ண உதைபந்தாட்டப்போட்டி தென்னாபிரிக்காவில் நடந்ததற்கு பின் மக்கள் மன்றில் இதுவரை தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2011 லும் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: