தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.12.12

இராணுவத்தில் பயிற்சி பெறும் தமிழ் பெண்களை பெற்றோர் பார்க்க முடியாதது ஏன்? : இராணுவ பேச்சாளர் விளக்கம்


கிளிநொச்சியிலிருந்து, இராணுவத்தில் சேர்க்கப்பட் ட தமிழ் பெண்களை அவர்களின் பெற்றோர் சென்று பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை என எழுந்த கு ற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை இராணுவ பேச்சாள ர் பதில் அளித்துள்ளார்.பயிற்சியில் உள்ளவர்களை வாரத்தில் ஒரு நாள் குறித்த நேரத்தில் மட்டும் பார்க் க அனுமதிக்கப்படும். பார்வையாளர்கள் ஒவ்வொரு நாளும் தாங்கள் விரும்பிய நேரத்தில் பயிற்சி பெறு பவர்களை பார்க்க
அனுமதிக்கபப்டுவார்களானால், எம்மால் ஓர் அர்த்தமுள்ளபயிற்சியை நடத்த முடியாது போகும். இராணுவ ப யிற்சி பெறுபவர்களுக்கு சில பொதுவான நிபந்தனைக்ள் உண்டு. இராணுவம் சகல பயிற்சியாளர்களையும் ஒரே விதமாகவே நடத்துகிறது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிக சூர்ய தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளுக்கு ஏற்ப வடக்கை சேர்ந்த தமிழர்களையும் இராணுவத்தில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டதாகவும், அதன் படியே கிளிநொச்சியிலிருந்து 109 பெண்கள் இராணுவத்தில் சேர்க்ப்பட்டதாகவும், இராணுவ பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
தங்களை ஏமாற்றி படையில் இணைத்து கொண்டதாக கூறி சுய விருப்பத்தின் பேரில் சில பெண்கள் அண்மையில் இராணுவத்தை விட்டு அண்மையில் வெளியேறியிருந்தனர். ஏனையவர்களை பெற்றோர் பார்வையிட படையினர் அனுமதிக்கவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

இதேவேளை இராணுவ பயிற்சி பெற்று வரும் ஒரு தொகுதி தமிழ் பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று திடீரென  அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் இதற்கான காரணம் என்னவென தெரியவில்லை எனவும் வேறு சில தகவல்கள் கூறுகின்றன. 

0 கருத்துகள்: