மார்பகத்தில் அறுவை சிகிச்சை செய்து, அதன் உள்ளே மில்லியன் கணக்கான யூரோ மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை கடத்திய இளம்பெண் ஒருவர், ஸ்பெயினில் உள்ள Barcelona"s El Prat விமானநிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.Barcelona"s El Prat விமான நிலையத்தில், 28 வயதுள்ள பனாமா நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண், சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்டதை கவனித்த விமான நிலைய அதிகார்கள், அந்த பெண்ணை தனியறையில் வைத்து விசாரணை
செய்தனர். பின்னர் பெண் காவலர்களின் உதவியால், அந்த பெண்ணுடைய உடலை சோதனை செய்து பார்த்ததில், அவருடைய இரண்டு மார்பகங்களிலும், சர்ஜரி செய்ததற்கான தையல்கள் இரத்தக்கறையுடன் இருந்ததை கண்டுபிடித்தனர்.www.thedipaar.com
உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று, மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில், மார்பகத்தின் உள்ளே சர்ஜரி செய்து £240,000-மதிப்புள்ள கோகைன் என்ற போதைப்பொருள்கள் அடங்கிய இரண்டு பாக்கெட்டுகள் உள்ளே மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் மீண்டும் சர்ஜரி மூலம் அந்த போதைபொருளை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமலேயே வற்புறுத்தலின் பேரில் போதைபொருளை உள்ளே வைத்து சர்ஜரி செய்திருந்ததாக தெரிய வந்தது. இந்த கடத்தல் சர்ஜர் ஸ்பெயின் நாட்டில் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணின் உடல் தற்போது நலமாக இருப்பதாகவும், மேற்கொண்டு அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருவதாகவும், காவல்துறை அதிகாரிகள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக