தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.12.12

சர்வதேசத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா வெற்றிகரமான ராக்கெட்டுப் பரிசோதனை


மிக நீண்ட உயரத்துக்குப் பயணிக்கக் கூடிய அதிவீச் சுத் திறனுடைய ராக்கெட்டுப் பரிசோதனை ஒன்றை சர்வதேச சமூகத்தின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் வடகொரியாஇன்று வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ள து. வடகொரிய நேரப்படி அதிகாலை 9:49 மணிக்கு  நி கழ்த்தப்பட்ட இப்பரிசோதனையில் நிர்ணயிக்கப் பட் ட கட்டங்களில் இந்த ராக்கெட்டுக்களின் பாகங்கள் சரியாக இலக்குகளை
தாக்கியுள்ளன. நாட்டின் செய் மதி ஒன்றை விண்ணில்நிறுத்துவதற்கே இச்சோதனை நிகழ்த்தப் பட்டதாக வ டகொரியா கூறியது. இதை அமெரிக்காவும் விண்ணில் ஒரு பொருள் நிறுத்தப் பட்டிருப்பதாகக் கூறி உறுதிப்படுத்தியுள்ளது. ஆனாலும் தென்கொரியா, அமெ ரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த ராக்கெட்டுப் பரிசோதனைக்குக் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் இந்நடவடிக்கையை அதி வீச்சுத் திறனுடை ய ஏவுகணைகளின் தொழிநுட்பங்களை அறிவதற்கு செய்யும் ஒரு மாறுபட்ட பரிசோதனை எனவும் விமர்சித்துள்ளன.

கடந்த 2009 ஆம் ஆண்டு வடகொரியாவின் இரண்டாவது அணுப் பரிசோதனையை அடுத்து அந்நாடு கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனை உட்பட அணுகுண்டு பரிசோதனைகளை மேற்கொள்ள தடை செய்யப்பட்டு ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்நிலையில் வடகொரியா இன்று நிகழ்த்திய ராக்கெட்டுப் பரிசோதனை வடகொரியாவின் அண்டை நாடுகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியதாக்கும் ஆத்திரமூட்டக் கூடிய செயல் என அமெரிக்கா விமர்சித்துள்ளது. இதேவேளை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனும் இப் பரிசோதனையை ஒரு தெளிவான உடன்படிக்கை மீறல் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் தமது வலயத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக உணர்ந்துள்ள ஜப்பான் ஐ.நா செயலாளருடன் ஒரு அவசர சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தென்கொரியாவின் அதிபர் தேர்தல் நிகழ்ந்து ஒரு கிழமைக்குள்ளும் வடகொரிய முன்னால் அதிபர் கிம் ஜொங்க் - இல் இறந்து ஏறக்குறைய ஒரு வருடங்களுக்குள்ளும் இந்த ராக்கெட்டுப் பரிசோதனை நிகழ்த்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: