தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.12.12

பாகிஸ்தான் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல்!


பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பச்சா கான் சர்வதேச விமான நிலையத்தில் இன்று தீவிரவாதிக ள் தாக்குதல் நடத்தினர். 5 ராக்கெட்டுகளை வீசி நட த்திய இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 12 பேர் பல த்த காயம் அடைந்தனர். இரண்டு ராக்கெட்டுகள் வி மான நிலைய ஓடுதளத்தில்..விழுந்து வெடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார். ஒரு ரா க்கெட் விமான நிலையம் அருகில் உள்ள குடியிருப் பு பகுதியில் விழுந்து வெடித்
துள்ளது. இதில் ஜன்னல்கள் நொறுங்கின. தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.



தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து பெஷாவர் விமான நிலையம் மூடப்பட்டது. விமான நிலையத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. எந்த திசையில் இருந்து ராக்கெட்டுகள் வீசப்பட்டன என்பது தெரியாததால் விமான நிலைய ஊழியர்கள் பீதியடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டது.

0 கருத்துகள்: