தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.12.12

சிரியாவில் அதிபர் அஸ்ஸாத்தை விட கிளர்ச்சி படைகள் ஆதிக்கம் பெற தொடங்கியுள்ளன!


சிரியாவில் பல மாதங்களாக கிளர்ச்சிப் படையினரு க்கும் அதிபர் பஷார் அல் அஸ்ஸாத்தின் படையின ருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் த ற்போது கொஞ்சம் கொஞ்சமாக கிளர்ச்சிப் படையி ன் கை ஓங்கி வருவதாகவும் சிரிய அதிபர் அஸ்ஸா ட்டின் ஆதிக்கம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அ மெரிக்க புலானாய்வு அமைப்புக்களும் ரஷ்யாவும் தெரிவித்துள்ளன.ஏற்கனவே அமெரிக்க மற்றும் ஐ ரோப்பிய நாடுகள் அதிபர் அஸ்ஸாத் போராட்டத் தை நிறுத்தும் வண்ணம் பதவி விலகுமாறு அழு த்தம்
பிரயோகித்து வந்தன. இன்னொரு பக்கத்தில் அஸ்ஸாத்துக்கு ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற முக்கிய நாடுகள் தமது ஆதரவை வழங்கி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சிரியாவின் புரட்சிப் படையை தாம் அங்கீகரிப்பதாக சமீபத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். மேலும் இந்த அறிவிப்புக்கு ரஷ்ய அதிபர் புடின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
கடந்த வருடம் மார்ச் 15 இல் தொடங்கிய சிரிய வன்முறைகளில் இதுவரை மொத்தம் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் கிட்டத்தட்ட 5 இலட்சம் அகதிகள் சிரியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். 1.2 மில்லியன் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். இதேவேளை சமீப காலமாக சிரிய அரசு புரட்சிப் படை மீது இரசாயன ஆயுதங்களையும் ஸ்கட் ரக ஏவுகணைகளையும் பிரயோகித்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது.

0 கருத்துகள்: