சீனாவில் மிக வேகமாக இயங்கும் அதிவேக இரயில் ஒன்று உலகிலேயே அதிக தூரத்தை கடந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2,200 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இந்த இரயில், இந்த தூரத்தை வெறும் 8 மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 350 கி.மீ வேகம் வரை செல்லக்கூடிய இந்த ரயில், மொத்தம்
35 நிறுத்தங்களில் நிற்கும்.
சீனாவின் தலைநகர் பீஜிங் நகரத்தில் இருந்து கிளம்பும் இந்த இரயில், 8 மணி நேரத்தில் 2,200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள Guangzhou என்ற நகரை அடைகிறது. இந்த இரயில் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் இயங்கும் என சீன இரயில்வே உயரதிகாரி ஒருவர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக