தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.12.12

காதலி போல் நடித்து 30 மில்லியன் டாலரை கொள்ளையடித்து, கொலைசெய்த அமெரிக்க பெண்ணுக்கு மரணதண்டனை.


அமெரிக்காவில் 30 மில்லியன் டாலர் லாட்டரியில் பரிசு விழுந்த ஒருவரை சமூக வலைத்தளம் மூலம் கவர்ந்து இழுத்து, மொத்த பணத்தையும் திருடியதோடு அல்லாமல், கொலையும் செய்த பெண் ஒருவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது.  Abraham Shakespeare என்ற அமெரிக்க கறுப்பினத்தை சேர்ந்தவருக்கு 2009ஆம் நடந்த ஒரு லாட்டரி குலுக்கலில் 30 மில்லியன் டாலர் பரிசு விழுந்தது. இந்த செய்தியை செய்தித்தாள்களில் பார்த்த Dorice Dee Dee Moore  என்ற பெண், அவருடையை பணத்தை கொள்ளையடிக்க தனியாகவே சதித்திட்டம் தீட்டியுள்ளார். முதலில் சமுக வலைத்தளம் ஒன்றில் அவருடன் நட்புடன் பழகுவதாக அறிமுகபடுத்தி, தன்னுடைய படுகவர்ச்சியான புகைப்படங்களையும் அவருக்கு அனுப்பியுள்ளார். பின்னர் நேரிலும் சந்தித்து நட்பை விரிவுபடுத்தினார். 



(மேலே உள்ள படத்தில் அழுதுகொண்டிருப்பவர் கொலை செய்யப்பட்ட Abraham Shakespeare அவர்களின் சகோதரி)
இந்நிலையில் கிடைத்த ஒரு சரியான சந்தர்ப்பத்தில், Abraham Shakespeare ஐ கொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்த மொத்த பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு, தலைமறைவானார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அமெரிக்க போலீஸார், தனிப்படை அமைத்து, Dorice Dee Dee Moore ஐ தேடி கண்டுபிடித்தனர். தற்போது அந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை முதலியவற்றில் Dorice Dee Dee Moore ஈடுபட்டது சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதால், Dorice Dee Dee Moore வுக்கு மரண தண்டனை அளித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை Abraham Shakespeare குடும்பத்தினர் வரவேற்று உள்ளனர்.

0 கருத்துகள்: