அமெரிக்காவில் உள்ள புலனாய்வு சமூகம் ஒன்று ச மீபத்தில் நடத்திய ஆய்வில் 2030 ஆம் ஆண்டளவில் ஆசிய நாடுகளின் வளர்ச்சி (global power) அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சியை விட மி க அதிகமாகவும்அவற்றைப் பின்னுக்குத் தள்ளும் வி தமாகவும் இருக்கும் என முன்னறிவித்தல் விடப்பட் டுள்ளது.இந்த அறிவித்தலில் முக்கியமாகக் கூறப்ப ட்டுள்ள விடயம் என்னவெனில் அதாவது இன்னும் இரு தசாப்தங்களில் (20 வருடங்களில்)
சீனா அமெரி க்காவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தி யாக உருவாகி விடும் என்பதாகும். மேலும் இதில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை யில் அபிவிருத்தியடைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மெதுவா ன பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத் தரம் சீர்கேடு அடைதல், வயதானவர் கள் தொகை மொத்த சனத்தொகையில் அதிகரித்தல் என்பன பாரிய சவால்க ளாக எதிர்காலத்தில் மிரட்டவுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 வருடங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் தேசிய புலனாய்வுக் குழு (NIC) இன் இதழிலேயே இத்தகவல்கள் காணப்படுகின்றன. சற்று விரிவாக நோக்கினால், சனத்தொகை அளவு, GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, இராணுவ வலிமை மற்றும் தொழிநுட்பத்துறையில் முதலீடுகள் ஆகிய முக்கிய பிரிவுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இன் வளர்ச்சியை இணைத்து ஆசியாவுடன் ஒப்பிட்டால் கூட ஆசியாவே எல்லாத்துறைகளிலும் அதிக வளர்ச்சியடைந்த பாகமாகப் முன்னேற்றம் அடையும் எனக் கூறப்படுகின்றது.
இந்த ஆசிய நாடுகளில் சீனா உலகளாவிய மிகப்பெரிய பொருளாதாரத்தை உடைய நாடாக வளர்ச்சியடைந்த போதும் உலகின் நம்பர் 1 சூப்பர் பவர் எனும் தகுதியை அடைவதற்கு இத்தகுதி மட்டும் போதாது எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக