தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.12.12

குஜராத் அரசியலில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டனர்


55 லட்சம் மக்கள் தொகையை கொண்ட குஜராத் முஸ்லிம்கள் அரசியலில் தீண்டத் தகாதவர்களாக கருதப்படுகின்றார்கள். மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் இருந்து முஸ்லிம்களை கிட்டத்தட்ட புறக்கணித்துவிட்டனர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் 7 முஸ்லிம்கள் மட்டுமே இடம்

பெற்றுள்ளனர். இது முஸ்லிம் மக்கள் தொகை விகிதாச்சாரப்படி பாதி அளவு கூட இல்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.கவின் வேட்பாளர்கள் பட்டியலில் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால், சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம் கூட இல்லை.
மோடியுடன் கருத்துவேறுபாடு கொண்டு கேசுபாய் பட்டேல் துவக்கிய குஜராத் பரிவர்த்தன் பார்டியின் வேட்பாளர்களில் சங்க்பரிவார்களை தவிர வேறு எவருக்கும் இடம் இல்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலில் 160 முஸ்லிம்கள் வெற்றிப் பெற்றிருந்தனர். இது பா.ஜ.கவின் நிலைப்பாட்டை மாற்றும் என அரசியல் நோக்கர்கள் கருதினர்.
அதுமட்டுமல்ல, 2009-ஆம் ஆண்டு அஹ்மதாபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றிப்பெற்று பா.ஜ.க சார்பில் மேயரான அப்துல்லாஹ் இப்ராஹீம் ஸயீத், முன்னாள் டி.ஜி.பி ஷபீர் எஸ்.கந்த்வாவாலா ஆகியோர் சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறுவோம் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.
குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஜூனியர் அணியாக செயல்படும் காங்கிரஸுக்கு, முக்கிய வாக்கு வங்கியாக முஸ்லிம்களே உள்ளனர். ஆனால், அவர்களை தேர்தல் அரசியலுக்கு கொண்டுவர காங்கிரஸ் தயாராக இல்லை. 2007-ஆம் ஆண்டு ஐந்து முஸ்லிம்கள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். 2009-ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க முஸ்லிம் வேட்பாளர்களுக்கு அளித்த பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் இம்முறை 7 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு அளித்துள்ளது. கடந்த முறை காங்கிரஸ் கட்சி நிறுத்திய அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றிப் பெற்றிருந்தனர்.
சங்கர்சிங் வகேலா போன்ற சங்க்பரிவார ஆதரவாளர்களால் வழி நடத்தப்படும் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.கவில் இருந்து பிரிந்த பிறகும் சங்க்பரிவார்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தியதாக பெருமைப் பேசும் கேசுபாய் தலைமையிலான பரிவர்த்தன் பார்டியும், பா.ஜ.கவும் மும்முனை போட்டியில் மோதும் வேளையில் குஜராத்தில் மீண்டும் தோற்பது முஸ்லிம்கள் தாம் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை.
2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்திய வரலாறு காணாத முஸ்லிம் இனப்படுகொலையின் போது இஹ்ஸான் ஜாஃப்ரியின் வீட்டை பா.ஜ.க தேர்வுச் செய்ய, இங்கு ஒரு முன்னாள் முஸ்லிம் எம்.பியின் பெயர் கூட இருக்க கூடாது என்ற சூழ்ச்சியாக இருக்குமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் குஜராத்தின் அரசியல் சூழல் அமைந்துள்ளது.
10 சதவீதம் முஸ்லிம் மக்கள் தொகையை கொண்ட குஜராத்தில் ஒரு முஸ்லிம் கூட கடந்த 20 ஆண்டுகளில் பாராளுமன்றம் சென்றதில்லை. இந்தியாவின் தேசத்தந்தை என போற்றப்படும் காந்தியடிகளுக்கு தென்னாப்பிரிக்கா செல்ல கப்பலை ஏற்பாடுச் செய்துகொடுத்த தாதா அப்துல்லாஹ்வின் தலைமுறையினர், தேசத்துரோகத்தையே வரலாறாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் காரர்களால் அரசியல் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட முரண்பாடான சூழல் தான் குஜராத்தில் நிலவுகிறது.
சிறுபான்மை வளர்ச்சி அமைச்சகம், சிறுபான்மை கமிஷன் ஆகியவற்றை நியமிப்போம், ஹஜ் இல்லம் கட்டுவோம், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை வழங்குவோம் என்று குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அளித்துள்ளது. இது ஒரு அனுகூலமான சூழலை உருவாக்கினாலும், முஸ்லிம் வாக்குகளை கவர காங்கிரஸ் போடும் திட்டம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்தியாவின் எல்லை மாநிலமான குஜராத்தை காவி மயமாக்குவதில் சங்க்பரிவார் பெரும் வெற்றியை பெற்றுள்ளது என்பதே இங்குள்ள அரசியல் சூழல் நமக்கு அளிக்கும் செய்தியாகும்.
காங்கிரஸில் சேர்ந்த பிறகும் காவி உள்ளத்தை மாற்றாத சங்கர்சிங் வகேலா, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மட்டுமே போட்டியிடுவார்கள் என அறிவித்த கேசுபாய் பட்டேல், சொராஹ்புத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் அமித்ஷாவுக்கு கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த மோடி – இவர்களில் யாரை ஆதரிப்பது என்பது ஜனநாயகத்தை நேசிப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தேர்தல் முடிவாவது நிம்மதியை தராதா? என்று ஏங்குகிறது முஸ்லிம்களின் உள்ளம். அவர்களின் வாக்குகளை ஒருங்கிணைத்தால் சில ஆச்சரியங்கள் ஏற்படலாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அப்பொழுது கூட மதசார்பற்ற வேடம் அணிந்துள்ள பலரும் சந்தர்ப்பம் கிடைத்தால் மோடியுடன் இணைவார்கள் என்பது அனுபவங்கள் உணர்த்தும் பாடமாகும். இதன் அண்மை உதாரணம், இத்தேர்தலில் மோடியின் கப்பல் மூழ்கிவிடும் என பயந்து பா.ஜ.கவை காப்பாற்ற சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து தாவி பா.ஜ.கவில் இணைந்த கோனர்ஹரி அமின்.
கட்சியில் ஏற்பட்ட சில்லரை கருத்து வேறுபாடுகள் மட்டும், இந்த காங்கிரஸ் காரனை பா.ஜ.கவில் இணைக்கவில்லை. மாறாக, குஜராத்தை சூழ்ந்திருக்கும் காவி மூடுபனியின் பாதிப்புதாம் என்பதே உண்மை ஆகும்.
சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்திற்கு பெரும் நிதியுதவி அளித்து, இதனால் “சேவக் கி ஹிந்த்”(இந்தியாவின் சேவகர்) என்று பட்டம் சூட்டப்பட்ட அப்துல் ஹமீத் மர்ஃபானியின் தலைமுறையினர் குஜராத் அரசியலில் களமிறங்கி முயற்சித்தால் அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை இனப்படுகொலைக்கு பிந்தைய குஜராத்தில் கல்வி-பொருளாதார துறைகளில் முஸ்லிம்களின் வளர்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

0 கருத்துகள்: