எகிப்தில் தொடர்ச்சியாக நடந்த ஆர்ப்பாட்டங்கள் அ ந்த நாட்டின் அதிபரும், முஸ்லிம் சகோதரத்துவக் க ட்சியின் தலைவருமான முஹ்மட் மோர்சி அவர்க ளை சற்று இறங்கிவரச் செய்திருக்கிறது.அண்மையி ல் மிகுந்த சர்ச்சைக்குரிய வகையில் தான் கையகப் படுத்திக் கொண்ட அதியுச்ச அதிகாரங்களை தான் ர த்து செய்வதாக அவர் இப்போது அறிவித்திருக்கிறா ர்.ஆனால், அவருக்கு எதிராக
போராட்டங்களை நடத்திய எதிர்க்கட்சிகளோ, இ து போதாது, சர்ச்சைக்குரிய வகையில் அவரால் கொண்டு வரப்பட்ட அரசியல மைப்பு நகல் குறித்து மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை அவர் நடத்தக் கூடா து”“ என்று கூறுகிறார்கள்.
இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு டிசம்பர் 25 ஆம் திகதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதிபர் ஒரு சர்வாதிகாரியைப் போன்று நடந்துகொள்வதாக அவரது விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால் தான் புரட்சியை பாதுகாப்பதாக அவர் கூறுகிறார்.
முக்கிய எதிர்க்கட்சியான தேசிய இரட்சண்ய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சுதந்திர எகிப்திய கட்சியின் தலைவரான அஹ்மட் அவர்கள், கருத்தறியும் வாக்கெடுப்பை நிறுத்தாமல், வந்திருக்கும் மோர்ஸியின் இந்த புதிய அறிவிப்பு தனக்கு அதிர்ச்சையைத் தருவதாக கூறியுள்ளார்.
““மக்களுக்கு பொய் சொல்லுகிறார்கள்”“ என்று அவரது கட்சி கூறியுள்ளது.
நவம்பர் 22 இல் மோர்சி அவர்கள், நீதித்துறையும் தன்னை கேள்வி கேட்க முடியாத அளவுக்கு, அதீத அதிகாரங்களை தன்வசப்படுத்திக்கொண்டதை அடுத்து நாடெங்கிலும் பெரும் போராட்டங்கள் வெடித்தன.
தற்போது அந்த அதிகாரங்களை அதிபர் கைவிடுவதாக, அவர் சார்பில் பேசவல்ல ஒருவர் அறிவித்திருக்கிறார்.
இது தமது போராட்டத்துக்கு கிடைத்த அரை வெற்றியாக எதிர்க்கட்சியினரால் பார்க்கப்படுகிறது.
கருத்தறியும் வாக்கெடுப்பு ரத்துச் செய்யப்படுவதுதான் தமக்கு முழுமையான வெற்றி என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், அறிவிக்கப்பட்ட கருத்தறியும் வாக்கெடுப்பை ரத்துச் செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை என்று துணை அதிபர் கூறுகிறார்.
மோர்சியின் இந்த நகர்வு அவர் சமரசம் செய்துகொள்ள முயலுவதன் முதல் சமிக்ஞை என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
இன்னுமொரு எதிர்க்கட்சியான ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம், இது ஒரு அரசியல் தகிடுதத்தம் என்று கூறுகிறது.
இதற்கிடையே மோர்சிக்கு ஆதரவானவர்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஊடகங்கள் மோர்சிக்கு எதிராக பக்கசார்பாக செயற்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
அரசுக்கு எதிரான அண்மைய ஆர்ப்பாட்டங்களில் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதிபர் மாளிகையும் தாக்குதலுக்கு உள்ளானது.
மோர்சியின் கட்சியான முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் அலுவலகத்துக்கும் தீவைக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக