தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.12.12

பிரிட்டனில் சிகிச்சை பெறும் மலாலாவை மகளுடன் சென்று நலம் விசாரித்த பாகிஸ்தான் அதிபர்.


பிரிட்டனில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி மலாலா யூசஃப்சாயை பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி சனிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.இச்சந்திப்பு குறித்து பிர்மிங்ஹாமில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயர் சிகிச்சை பெற்று வரும் மலாலாவை ஜர்தாரி சனிக்கிழமை சந்தித்தார். மருத்துவர்களிடம் மலாலாவின் உடல்நிலை குறித்தும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும்

விசாரித்தார்.

 இதைத் தொடர்ந்து மலாலா, அவரின் தந்தை மற்றும் சகோதரர்களை 5 நிமிடம் சந்தித்தார். மலாலாவை அக்கறையுடன் கவனித்துக்கொள்ளும் மருத்துவ ஊழியர்களுக்கு ஜர்தாரி நன்றி தெரிவித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அப்போது ஜர்தாரியின் மகள் அஸிஃபா புட்டோவும் உடனிருந்தார். மலாலாவை சந்தித்தபோது, அவரது தைரியத்தை பாராட்டியதோடு, பயங்கரவாதத்தை பாகிஸ்தான் மக்கள் புறந்தள்ளிவிட்டதாக ஜர்தாரி கூறியதாக ஏபிபி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

 "பாகிஸ்தானிலும், பிரிட்டனிலும் சிறந்த சிகிச்சை பெற உதவியதற்காக” ஜர்தாரிக்கு மலாலா நன்றி தெரிவித்தார்.பாகிஸ்தானில் பெண் கல்வி குறித்து வலியுறுத்திய மலாலா, கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார்.இதில், படுகாயமடைந்த அவர் பிரிட்டன், பிர்மிங்ஹாமில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் அக்டோபர் 15ஆம் தேதியிலிருந்து உயர் சிகிச்சை பெற்று வருகிறார்.

0 கருத்துகள்: