தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.12.12

இந்திய சந்தைக்குள் நுழைவதற்காக வால் மார்ட் நிறுவனம் ரூ.125 கோடிக்கு மேல் செலவு? : புதிய சர்ச்சை


இந்திய சந்தைக்குள் நுழைவதற்காக ஆதரவு தேடும் முயற்சியில், வால் மார்ட் நிறுவனம் சுமார் ரூ.125 கோடிக்கு மேல் செலவழித்துள்ளதாக தகவல் வெளி வந்ததை அடுத்து, மாநிலங்களவையில் பாஜக கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.வால் மார்ட்டினால் மி கப்பெரும் நன்மை அடைந்திருக்கும் முதலாவது நப ர்கள், மத்திய அமைச்சர்கள், ஆளும் கூட்டணி அரசி யல் வாதிகள் தான்
என்பது இதிலிருந்து புலனாவதாகவும், உடனடியாக காங் கிரஸ் கூட்டணி இந்த விவகாரத்தில் தனது விளக்கத்தை வழங்க வேண்டும் எனவும், பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட் டதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் நடைமுறைச்சட்டங்கள் படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் தனியார் நிறுவனங்கள் அரசியல் செல்வாக்குடைய நபர்களின் உதவியை நாடலாம். இதற்காக பணமும் செலவிடலாம். ஆனால், காலாண்டுக்கு ஒரு முறை, யார் யாருக்காக எவ்வளவு செய்யப்பட்டது எனும் கணக்கு விபரத்தை மேல் சபையில் தாக்கல் செய்தாக வேண்டும். அந்த வகையில் வால் மார்ட் நிறுவனம் மேல் சபையில் தாக்கல் செய்த Lobbying செலவு கணக்கின் மூலம் தற்போது வெளியாகியுள்ளது.

அவ்வகையில் கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்திய சில்லரை வணிகத்தில் முதலீடு செய்யும் நோக்கில் அமெரிக்க எம்.பிக்கள், வெளியுறவு துறை அதிகாரிகளின் கவனிப்புக்காகவும் இந்தியாவுடன் தொடர்புடைய லாபியிங் செலவுகளுக்காகவும், ரூ.125 கோடிக்கு மேல் செலவழித்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த மூன்று மதங்களில் மட்டும், இந்தியாவுக்குள் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பிலான விவாதம் உள்ளிட்ட விவகாரங்களுக்காக ரூ.10 கோடியை வால் மார்ட் செலவிட்டுள்ளது. இச்செலவுகளால் மத்தியில் ஆளும் கூட்டணி அரசியல் தலைவர்கள், அரச பிரதிநிதிகள் நன்மை அடைந்திருக்கலாம் எனும் சந்தேகத்திலேயே பாஜக தற்போது இப்புதிய பிரச்சினையை எழுப்பியுள்ளது.

இதேளை, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டதை அடுத்து, வால்மார்ட் நிறுவனத்தின் முதலாவது வர்த்தக நிலையம், டெல்லியில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கும் யூனியன் பிரதேசமான புது டெல்லியில் வால்மார்ட் கடைகள் முதன்முதலாக அமைவதை ஷீலா தீட்சித் விரும்புவதாகவும், இதற்காக மேற்கு டெல்லியில் உள்ள டிக்ரி குட் பகுதியில் அரசுக்கு சொந்தமான 72 ஏக்கர் வெற்றிட இடத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் கடைகள் அமைக்கப்படும் எனவும் டெல்லி அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

0 கருத்துகள்: