உலகத்துக்கே போலீஸ்காரர் போல செயல்படுவ தை விட்டுவிட்டு, அமெரிக்க மக்கள் பிரச்னைகளை மட்டும் கவனிக்க வேண்டும்Õ என்று அதிபர் ஒபாமா வுக்கு தலிபான் போராளிகள் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.கடந்த 96ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானை தலிபான் போராளிகள் பிடித்த னர். அவர்கள் ஆட்சியில் கடும் கட்டுப்பாடுகள் விதி க்கப்பட்டன. அமெரிக்க த
லைமையிலான நேட்டோ படைகள் ஆப்கனுக்கு செ ன்று தலிபான் போராளிகளின் ஆட்சியை கைப்பற்றியது
லைமையிலான நேட்டோ படைகள் ஆப்கனுக்கு செ ன்று தலிபான் போராளிகளின் ஆட்சியை கைப்பற்றியது
போராளிகளை ஒழிக்கும் பணியில் தொடர்ந்து அமெரிக்க படைகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ஆப்கன் மீது தொடுத்த போரில் அமெரிக்கா தோல்வி அடைந்து விட்டது. இதை இப்போதாவது ஒபாமா புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் புனித மண்ணில் உள்ள அமெரிக்க படைகளை முற்றிலும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
அமெரிக்க மக்கள் பிரச்னைகளை மட்டும் ஒபாமா பார்த்தால் போதும். மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதை விட்டு விட வேண்டும். உலக நாடுகளுக்கு எல்லாம் போலீஸ்காரர் போல அமெரிக்க செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்கா பல போர்க் குற்றங்கள் புரிந்திருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா மக்கள் மீது மற்ற நாட்டினர் வெறுப்பில் உள்ளனர். அதை இன்னும் அதிகரிக்க வேண்டாம்.
இவ்வாறு ஜபியுல்லா முஜாகித் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக