உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதி தலைமயிலான 3 ந பர் அமர்வு, டெல்லியில் உள்ள "அக்பர்பாதி பள்ளிவா சல்"
வழக்கில், ஓம்.ஜீ.சாய்பாபா மற்றும் "ஜன் ஜாக்ர ன் மன்ச்" ஆகிய ஹிந்து
அமைப்புக்களின் மனுக்க ளை நிராகரித்தது.மேலும், அக்பராபாதி பள்ளிவாசல் இடுப்புக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை யையும் நீட்டித்து உத்தரவிட்டனர்.இது தவிர, பள்ளி வாசலை பாதுகாப்பதில் முனைப்பு காட்டும் டெல்லி சட்டமன்ற
உறுப்பினர், ஷுஐப் இக்பாலுக்கு டெல்லி போலீஸ் மற்றும் டெல்லி
மாநில அரசின் மூலம் கொடுக்கப்படும் அழுத்தங்க ள் குறித்தும் மாநில அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனர்.முஸ்லிம்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை, 45 நிமிடங்கள் ஆய்வு செய்த நீதிபதிகள், ஓம்.ஜீ.சாய்பாபாவிடம், உங்கள் தரப்பு வாதங்கள் என்ன? எனக்கேட்டனர்.
மாநில அரசின் மூலம் கொடுக்கப்படும் அழுத்தங்க ள் குறித்தும் மாநில அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனர்.முஸ்லிம்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை, 45 நிமிடங்கள் ஆய்வு செய்த நீதிபதிகள், ஓம்.ஜீ.சாய்பாபாவிடம், உங்கள் தரப்பு வாதங்கள் என்ன? எனக்கேட்டனர்.
அரசின் சார்பாக வக்கீல் வைத்து வாதாடும் படி, கடந்த முறை நீதிமன்றம் பணித்ததை ஏற்க மறுத்த ஓம்.ஜி.சாய்பாபா, வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றும்படி கேட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகளை எதிர்த்து கோஷங்களை எழுப்பியதையடுத்து, நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இது தவிர, "ஜன் ஜாக்ரன் மன்ச்" என்ற ஹிந்து அமைப்பு, தன்னையும் இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்ததையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.
ஒரு கட்டத்தில் பல வக்கீல்கள், தங்களிடையே மோதிக்கொள்வதை கவனித்த நீதிபதிகள், கூச்சல் குழப்பம் தொடர்ந்தால், வழக்கு விசாரணையை ஓராண்டுக்கு தள்ளி வைத்து விடுவோம், என்று எச்சரித்தனர்.
"ஷுஐப் இக்பால்" சார்பாக வழக்கறிஞர்கள், எம்.எம்.கஷீப் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் வாதாடுகையில், பள்ளிவாசலை இடிக்க சொல்லி, அரசும்-போலீசும் அவரை எப்படியெல்லாம் நிர்பந்தித்தனர், என்று விரிவாக எடுத்துரைத்தனர்.
குறிப்பாக, கடந்த 2004 முதல் அவருக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை விலக்கிக்கொண்டது உட்பட பல நெருக்குதல்களையும் விவரித்து வாதாடினர்.
அரசின் சார்பாக ஆஜரான "அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல்" சித்தார்த் லோத்ரா, பல இடங்களில் தடுமாறியதை கவனித்த நீதியரசர்கள், வழக்கை வரும் டிசம்பர் 5ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், "சுபாஷ் பார்க்" வளாகத்தில் உள்ள அக்பராபாத் பள்ளிவாசலை "ஸ்டேட்டஸ் கோ" நிலையிலேயே வைத்திருக்கும் படியும் உத்தரவு பிறப்பித்தனர்.
நன்றி:- மறுப்பு மீடியா செய்தி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக