தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.11.12

விஸ்வரூபம் படத்தை முதலில் எங்களுக்கு திரையிட்டுக் காண்பிக்கவேண்டும் : தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்


நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்து இருக்கும் விஸ் வரூபம் படத்தை முதலில் தங்களுக்கு திரையிட்டு காண்பிக்கவேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.மு ஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ரிஃபான் இது தொடர்பில் பேசுகையில், "நடிகர் கமல்ஹாசனி ன் விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களை தீவிரவா திகள், வன்முறையாளர்கள்
என்பது போல சித்தரித்து உள்ளதாக அறிகிறோம். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே சுய லாபத்துக்காக முஸ்லீம் விவகாரங்களைக் கையில் எடுத்துக் கொண்டு, அவர்களை வன்முறையாள ர்கள், தீவிரவாதிகள் என்பது போலவே காண்பித்து படங்கள் எடுத்து வருகின்ற னர். ஆப்கானிஸ்தான் போரை முன்னிறுத்தி கதை பின்னப்பட்டது போல வி ஸ்வரூபம் படத்தின் பல காட்சிகள் இருப்பதாக அறிந்தோம்.

எனவே, விஸ்வரூபம் திரைப்படத்தை மனித வள மேம்பாட்டு ஆணையம் சேர்ந்தவர்கள் , மற்றும் எங்கள் அமைப்பினை சார்ந்தவர்களுக்கு முதலில் போட்டுக் காண்பிக்க வேண்டும். அந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்தால் நீக்கிவிட்டு திரையிடட்டும். இதுதான் எங்களின் வேண்டுகோள்" என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் நேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு கமல் தமிழக முதல்வரை சந்தித்தார். இந்த சந்திப்பும் கூட, படத்தை திரையிட எந்தவித தடையும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளத்தான் என்றும் கூறப்படுகிறது.


கமல்ஹாசனே எழுதி இயக்கியுள்ள விஷ்வரூபம் திரைப்படம் தமிழ் ஹிந்தி இரு மொழிகளிலும் வெளிவருகிறது. Red Tails எனும் திரைப்படத்தின் பின்னர் Auro 3D மற்றும் 11.1 Surround Sound முறையில் வெளி வரும் உலகின் இரண்டாவது திரைப்படம் விஷ்வரூபம். தற்போது இணையத்தில் வெளிவந்துள்ள விஷ்வரூபம் புதிய ட்ரெய்லர், 
இவற்றையும் மறவாமல் காணுங்கள் :

0 கருத்துகள்: