தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.11.12

ஒபாமாவின் வெற்றி செய்தியை போதையில் தள்ளாடியபடி செய்த வாசித்த நியூஸ் ரீடரால் அமெரிக்காவில் பரபரப்பு.

ஏ.பி.சி. டிவி சேனலில் அமெரிக்க அதிபர் தேர்தல் நே ரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட போது செய்தியை தொ குத்தளித்து வந்த இருந்த டயான் சோயர் என்ற நியூ ஸ் ரீடர் போதையில் இருந்தாரா?" என்ற கேள்விதா ன் இப்போது ஹாட் டாபிக் ஆக டிவிட்டரில் அடிபட் டுக்கொண்டிருக்கிறது.புதன்கிழமையன்று ஒபாமா ஜெயித்ததைவிட சமூக வலைத்தளங்களில் இதுதா ன் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியதாம்.டிவிட்டரில், ‘போதையில் டயான் சோயர்' என்ற பெயரில் ஒரு ஹான்டில் தொடங்கப்பட்டு, அதையும் நூற்றுக் க ணக்கில் ஃபாலோ
செய்ய ஆட்கள் இணைந்து கொ ண்டார்கள். நேற்றைய பிரபலமான ட்விட்டுகளில் ஒன்று, "ஒபாமா ஜெயித்த பார்ட்டியை டயான் சீக்கிரமே ஆரம்பித்து விட்டாரா?" என்பதுதான்.

தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த இரவில் நேரடி ஒளிபரப்பில் தொடர்ந்து இருந்த டயான், நாலைந்து தடவை வித்தியாசமாக நடந்து கொண்டதை பலரும் கவனித்தனர். நேரடி ஒளிபரப்பின் போது அவர் அமர்ந்திருந்த தோற்றமே, அவர் போதையில் இருப்பது போல இருந்ததாக நேயர்கள் கூறியுள்ளனர்.

இரவு சுமார் 10 மணிக்கு (EST) நியூயார்க் டைம் சதுக்கத்தில் உள்ள ஏ.பி.சி. ஸ்டூடியோவில் இருந்து லைவ் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட போது அவரால் நேராக நிமிர்ந்து அமர முடியவில்லை. கைகளை மேஜையில் ஊன்றியபடியே பேசினாராம். பின்னர் திடீரென்று லேசாக திரும்பி, "நம்ம மியூசிக்கை போடுங்கள். முக்கிய விஷயம் சொல்லப் போகிறேன்" என்று கூறியுள்ளார்.

மினசோட்டா பகுதியின் முடிவு வந்த நேரத்தில் "பிரசிடென்ட் பாரக் ஒபாமா மினசோட்டா மாகாணத்தில் வெற்றி பெற்றார்" என்று கூறினார். ஜெயிக்கும் முன்னதாக யாரும் அதிபர் என்று சொல்வதில்லை என்பதால், அதன்பின் அதை திருத்தி சொன்னபோதும், சரியாகச் சொல்ல முடியவில்லை. மறுபடியும் வாய் குளற, "பிரசிடென்ட் ஒபாமா' என்றே கூறினார்.

ஏ.பி.சி. சேனலின் மிகத் துல்லியமான செய்திவாசிப்பாளரான டயானுக்கு 66 வயதாகிறது. 1989 ஆம் ஆண்டில் இருந்து 1998ம் ஆண்டுவரை ப்ரைம் டைம் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். எந்தவொரு டிவி ஷோவிலும் இப்படி தடுமாறியதை கண்டிருக்க முடியாது. ஆனால் திடீரென்று லைவ் ஷோவில் இவர் தடுமாறவே பரபரப்பு பற்றிக்கொண்டு விட்டது.

இந்த விவகாரம் மிக பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்த நிலையில், ஏ.பி.சி. தொலைக்காட்சி நிர்வாகம் திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. டயான் தொடர்ந்து 4 நாட்கள், ஸ்டூடியோவில் இருந்ததால் களைப்பு ஏற்பட்டதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிபர் தேர்தலுக்கு முன்புதான், நியூயார்க் பகுதியில் சான்டி சூறாவளி அடித்தது. அதற்கு ஏ.பி.சி. சேனல் 24 மணிநேர கவரேஜ் கொடுத்தது. அதன்பின், அதிபர் தேர்தல் பரபரப்புகள் தொடங்கிவிட்டன. இதனால் ஓய்வு கிடைக்காத நிலையில், களைத்துப் போன நிலையில், அதிபர் தேர்தல் லைவ் டெலிகாஸ்ட் நடந்தபோது தடுமாறிவிட்டார் என்று சொல்லி டயானை காப்பாற்றிவிட்டது டிவி சேனல்.

0 கருத்துகள்: