அணு உலை பிரச்சினையால் ஈரான் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. இதனால் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் மிகவும் குறைகிறது. இதன் விளைவாக ஈரானின் பணம் மதிப்பு வெகுவாக சரிந்து வருகிறது.எனவே இந்த பொருளாதார நெருக்கடியை சமாளித்து டாலர், யூரோ கையிருப்பை சரிக்கட்டும் தீவிர நடவடிக்கையில் ஈரான் இறங்கியுள்ளது. இதனை அடுத்து
வெளிநாடுகளில் இருந்து கார்கள், மொபைல் போன்கள், லேப்–டாப் மற்றும் சில ஆடம்பர பொருட்களை இறக்குமதிக்கு தற்காலிக தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
இந்த தகவலை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், 10 விதமாக பொருட்களுக்கு தடை போடலாம். ஆனால் எந்தெந்த பொருட்களுக்கு தடை விதிக்கலாம் என்பதில் அதிகாரிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக