துருக்கியின் தென் கிழக்குப் பகுதியிலுள்ள சீரிட் மா காணத்தில் துருக்கியின் விசேட அதிரடிப் படையின ருடன் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.சிகோர்ஸ்கி' என அழை க்கப் படும் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 13 இராணுவ வீரர்கள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட மொத்தம் 17 பேரும் இவ் விபத்தில் பலியாகியுள்ள னர்.மோசமான வானிலையே இந்த விபத்து ஏற்பட் டக் காரணம் என உள்ளூர்
அதிகாரிகளும் சீரிட் மாநில ஊடகங்களும் தெரிவி த்துள்ளன.
உள்ளூர்த் தொலைக் காட்சி ஒன்று இதை குறித்து தகவல் தருகையில் இந்த ஹெலிகாப்டர் விபத்து பனிமூட்டம் நிறைந்த மலைப் பகுதியில் நிகழ்ந்தது என்றும் விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது.
இதேவேளை பலியான இராணுவ வீரர்கள் துருக்கியின் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலை 'சீரிட்' ஆளுநர் 'அஹ்மெட் ஆய்டின்' உறுதிப் படுத்துள்ளார். மேலு இந்த விபத்தின் பின்னணியில் அப்பகுதியில் செறிந்து வாழும் குர்திஷ் போராளிகள் இருக்கலாம் எனக் கருதப் படுவதற்கு உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை குர்திஷ் இன ஆயுத தாரிகளை அழிப்பதற்காக துருக்கி இராணுவம் தென் கிழக்குப் பகுதியில் மிகவும் விழிப்புணர்வுடன் இயங்கி வருகின்றது. இந்நிலையில் PKK எனப்படும் குர்திஷ் இன ஊழியர் கட்சி கடந்த சில மாதங்களாக துருக்கி இராணுவ இலக்குகளைக் குறி வைத்து தாக்குதல்களைத் தீவிரப் படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக