தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.11.12

சீன தலைவர்களை கதிகலங்க வைத்த பதினொரு வயது மாணவன்


சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் 18 வது மாநில மாநாடு தற்பொழுது பெய்ஜிங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.உலகத்தில் உள்ள முக்கிய ஊட கங்களில் எல்லாம் சீனாவில் உள்ள ஊழலை புதி தாக வரவுள்ள தலைவர் எப்படி களையப்போகிறார் என்ற விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகி ன்றன.இந்த நிலையில் ஆறாம் வகுப்பு படிக்கும் சன் லியோன் என்ற 11 வயது பாடசாலை மாணவர் கேட் ட கேள்வி சர்வதேச ஊடகங்களில் அதிக முக்கியத் துவம் பெற்றுள்ளது.சீனப்
பாடசாலைகளுக்கு சத்துணவை வழங்கும் அரசு மா ணவருக்கு நோயை ஏற்படுத்தாத உணவை வழங்க முடியுமா என்ற கேள்வி யை எழுப்பியுள்ளார்.
சீனாவில் மலிந்து கிடக்கும் ஊழல் பாடசாலைகளின் சத்துணவில் கலப்படங்களை பாரிய அளவில் செய்து வருகிறது, கடந்த 2008ம் ஆண்டில் மெலமின் என்ற பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட இரசாயன கலவையை பாடசாலைகளுக்கு வழங்கும் பால் மாவில் கலந்ததால் ஆறு பிள்ளைகள் இறந்து மூன்று இலட்சம் பிள்ளைகள் பாதிக்கப்பட்டார்கள்.
சீனர்கள் தமது உணவில் புற்றுநோயை ஏற்படுத்தும் மலிந்த எண்ணெயை ஊற்றுகிறார்கள், பழுதடைந்த மரக்கறியை சேர்க்கிறார்கள், பழுதடைந்த உணவில் இரசாயன கலவை தூவி மறுபடியும் பிள்ளைகளுக்கு வழங்கி ஊழல் புரிகிறார்கள்.
எல்லா வீரமும் வீரப்பிரதாபங்களும் பேசும் உங்களால் சிறு பிள்ளைகளுக்காவது தரமான உணவை வழங்க முடியுமா.. என்ற கேள்வியை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் முன் அந்த மாணவன் எழுப்பியுள்ளார்.
இந்தக் கேள்விக்காக சீனத்தலைவர்களால் வெட்கப்பட முடிகிறதே அல்லாமல் உரிய பதிலைக் கூற முடியவில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளன.
மேலும் சோசலிசம் பேசும் சீனாவில் ஏழைக்கும் பணக்காரருக்குமான இடைவெளி கடந்த 1994 ல் இருந்து 2012 ற்கு இடையில் 48 வீதமாக அதிகரித்துள்ளது, முதலாளித்துவ நாடான டென்மார்க்கிலேயே 21.8 வீதமாத்தான் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் உள்ள எட்டுப்பேருக்கு ஒருவர் இந்த இரும்பு ஆட்சி முறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் புதிதாக பதவிக்கு வரவுள்ள ஸீ ஜின்பிங் சீனாவில் ஜனநாயக மாற்றங்களை கொண்டுவர போராடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சீன கம்யூனிசத்தை தொடர்ந்தும் அதிகார கட்டிலில் காப்பாற்ற முயலும் ஒருவராக இவர் பதவிக்கு வருகிறார், உரிய சீர்திருத்தங்களை செய்யாவிட்டால் சீனா பாரிய சிக்கல்களை சந்திக்கும்.
ஏற்கெனவே சீன அதிகாரத்திற்கு எதிராக இதுவரை மொத்தம் 180.000 ஆர்பாட்டங்கள் ஆங்காங்கு நடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் வரும் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவை முந்தி உலகின் முதலாவது பொருளியல் வல்லரசாக சீனா வருமா என்ற கேள்விக்கு புதிய தலைவரின் திட்டங்களே பதிலாக அமையும் என்று உலகம் காத்திருக்கிறது.

0 கருத்துகள்: