சர்வதேச போலீஸ் பிரிவான இன்ரப்போலின் தலை வராக பிரான்சிய பெண் போலீஸ் அதிபர் மரிலி பல ஸ்ராசி Mireille Ballestrazzi தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று வியாழன் ரோமில் நடைபெற்ற இன்ரப்போ ல் மாநாட்டில் இவர் தேர்வு செய்யப்பட்டார்.உலகத் தின் மிகப்பெரிய போலீஸ் பிரிவுக்கு பெண் ஒருவர் தலைவராக வருவது இதுவே முதற்தடவையாகும். தற்போது 58 வயதைத் தொட்டுவிட்ட இவர் குழு வ ன்முறைக்கு எதிரான நடவ
டிக்கைகளை முறியடிப்பதில் வல்லமை பெற்றவர்.
பிரான்ஸ் நகரமான லியோனில் உள்ள இன்ரப்போல் காரியாலயம் இந்தச் செய்தியை பெருமைக்குரிய நிகழ்வாக தனது ரிவிற்றர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இவர் மிகவும் திறமை வாய்ந்த பெண் போலீஸ் கமிசனர் என்றும், பிரான்ஸ் பெண்கள் போலீஸ் சரித்திரத்தில் முக்கிய பாத்திரமொன்றை இவர் வகிக்கிறார் என்றும் பிரான்ஸ் உள்நாட்டு அமைச்சர் மனுவல் வேல்ஸ் தெரிவித்தார்.
பிரான்சின் போலீஸ் கமிசனராக இருந்த இவர் ஏற்கெனவே இன்ரபோலின் நிர்வாகக் குழு உப தலைவராகவும் இருந்துள்ளார்.
இவர் பதவியேற்றிருப்பது பிரான்சில் பெருகும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக