தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.11.12

பொதுவிடங்களில் சிறுநீர் கழிப்பதை எதிர்த்து ராஜஸ்தானில் நூதன போராட்டம்


இந்தியாவின் மேற்கு மாநிலமான ராஜஸ்தானில் ச மீபத்தில் ஒரு சமூக அமைப்பைச் சேர்ந்த தொண்டர் கள் வீதியில் டிரம் மற்றும் விசில்களுடன் நூதன போராட்டம் ஒன்றை நிகழ்த்தி வருகின்றனர். இதன் நோக்கமும் விசித்திரமானது தான்.இந்தியாவில் பல முக்கிய நகரங்களின் மூலை முடுக்குகளிலும் கிரா மப் புறங்களில் கண் பார்வைக்குப் படும் படியும் பொ துவிடங்களில் சிறுநீர் கழிப்பது வாடிக்கையான
ஒன் றாகும். இந்தப் பழக்கத்தை மாற்றுவதற்கே இப்போராட்டம் முன்னெடுக்கப் பட் டுள்ளது. இதற்காக ராஜஸ்தானின் 'ஜுன்ஜுனு' மாவட்டத்தில் உள்ள 34 கிராம ங்களில் இவர்கள் ஊர்வலம் நடத்தினர்.

இதன்போது பொதுமக்கள் முன்னிலையில் யாரேனும் சிறுநீர் கழித்தால் அவர்கள் உடனே டிரம்களை அடித்தும் விசில்களை ஊதியும் அவரை நிறுத்துவார்கள். இது மட்டுமல்லாது பல தடவை சிறுநீர் கழித்தவர் கண்டு பிடிக்கப் பட்டால் குற்றச் செயலில் ஈடுபட்டவர் போல் அவர் கருதப்பட்டு அவரிடம் இருந்து குறிப்பிட்ட தொகை அபராதமாக அறவிடப் படும் எனவும் இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய சனத்தொகையான 1.3 பில்லியனில் கிட்டத்தட்ட அரைப் பங்கினர் வறியவர்கள் எனவும் தமது வீட்டில் மலசல கூட வசதி இல்லாதவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலை இவ்வமைப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பொது இடங்களில் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதன் மூலமும் எச்சில் துப்புவதன் மூலமும் இந்திய கிராமங்களில் வாந்திபேதி (Tapeworm) ஆகிய தொற்று நோய்கள் பரவ காரணமாகின்றது.

இதனைத் தடுத்து நிறுத்த தம்மால் ஆன சிறு பங்களிப்பாக மலசலகூட வசதி இல்லாத வறியவர்களுக்கு அதனைத் தமது வீட்டில் அமைப்பதற்கு ரூ 9 100 பணத்தொகை 'ஜுன்ஜுனூ' கிராமத்தில் உள்ள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இவ்வமைப்பினர் உதவித்தொகையும் அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: