அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் டிரோனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், செங்குத்தாக ஏறி இறங்கும் அதிநவீன டிரோன்களை ஈரான் தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணுவ வீரர்கள் பலியாவதை தடுக்க, ஆளில்லா உளவு விமானம் டிரோன் மூலம் அமெரிக்க படைகள்
தாக்குதல் நடத்தி வருகின்றன.டிரோன் விமானங்கள் மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் குற்றம் சாட்டி போர் தொடுப்பதாக மிரட்டல் விடுத்தன. அதை பற்றி கவலைப்படாத ஈரான், பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தது.
கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் பறந்த டிரோன் விமானத்தை அந்நாட்டு படையினர் சுட்டு வீழ்த்தினர். அந்த டிரோனை ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் அனுப்பியதாகவும், டிரோன் பாகங்கள் ஈரானில் தயாரிக்கப்பட்டு லெபனானில் இணைத்து டிரோன் உருவாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியது. இந்நிலையில், அமெரிக்க, இஸ்ரேல் நாடுகளை எச்சரிக்கும் வகையில், செங்குத்தாக ஏறி இறங்கும் அதிநவீன டிரோனை ஈரான் தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த டிரோனை இயக்க ரன்வே தேவையில்லை. நின்ற இடத்தில் இருந்து அப்படியே செங்குத்தாக பறக்கும். செங்குத்தாக தரை இறங்கும். இதனால் நினைத்த இடத்தில் திடீரென தாக்குதல் நடத்த முடியும். உலகிலேயே இதுபோன்ற டிரோன் உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை என்று டிரோன் திட்ட ஆராய்ச்சியாளர் அப்பாஸ் ஜாம் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக