தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.11.12

ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு இறைவன் அருளால் 400 ஹஜ் பயணிகள் உயிர் தப்பினர்


ஏர் இந்தியா விமானம் 400 ஹஜ் பயணிகளுடன் ஜெத்தாவில் இருந்து இந்தி யா வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 747 வி மானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொல் கத்தாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.ஹஜ் பயணிகள் 400 பேருடன் ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 747 விமானம் சவுதி அரேபியாவின் ஜித்தா வில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது. இந்த விமா னத்தில் திடீர் என்று தொழில்நுட்பக் கோளாறு
ஏற்ப ட்டதால் நேற்று இரவு 10.45மணிக்கு கொல்கத்தாவில் உள்ள என்.எஸ்.சி. போ ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் தீப் பிடித்தால் எச்சரிக்கும் அலாரம் திடீர் என்று வேலை செய்யாததால் தான் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இருந்தனர் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் மிசோரம் முதல்வர் லால் தன்ஹாவ்லாவை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியா விமானம் நேற்று கொல்கத்தாவில் இருந்து தலைநகர் அய்ஸ்வால் சென்றது. ஆனால் அய்ஸ்வாலில் மோசமான வானிலை நிலவியதால் விமானம் நேற்று மதியம் 2.20 மணிக்கு மீண்டும் கொல்கத்தாவுக்கே திரும்பியது. நன்றி : முகநூல் பக்கம் அப்துல் வஹாப்

0 கருத்துகள்: