சிரியாவில் உள்ள காமா நகரில் தற்கொலைக் குண் டுத்தாரி ஒருவர் நடாத்திய தாக்குதலில் 50 சிரியப் படையினர் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டுள் ளார்கள்.தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அல் ந சூரா புறொன்ற் என்ற போராளி அமைப்பு நடாத்தியி ருக்கிறது, இந்த அமைப்பு அல் காய்தாவுடன் தொட ர்பு கொண்ட அமைப்பாகும்.மறுபுறம் இட்லிப் வட்ட கையில் சிரிய விமானங்கள் குண்டு வீசித்தாக்குதல் நடாத்தியதில் 20 போராளிகள் கொல்லப்பட்டுள்ளார் கள்.சமீப நாட்களில் இடம்
பெற்ற மோசமான இரத்தக் களரியில் இது மிக முக் கியமான தாக்குதலாகவும் சிரியப் படைகளுக்கு பேரிழப்பாகவும் அமைந்துள் ளது.
இது இவ்விதமிருக்க பிரான்சிய அதிபர் பிரான்சியோ ஒலந்த அவசர விஜயமாக நேற்று லெபனானைச் சென்றடைந்துள்ளார்.
சிரியாவில் ஏற்பட்டுள்ள பிரச்சனையானது லெபனான் நாட்டின் உளவுப்பிரிவு தலைவரை வெடிகுண்டு வைத்து கொன்ற பின்னர் இந்த அவசரப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் பிரான்சிய அதிபர்.
ஏற்கெனவே கொல்லப்பட்ட உளவுப்பிரிவு தலைவர் பிரான்சில் இருந்து லெபனான் வந்தபோதே கொல்லப்பட்டமை தெரிந்ததே.
இந்த நிலையில் லெபனான் வந்த பிரான்சிய அதிபர் உள்நாட்டு கலவரம் ஏற்படாத வகையிலும், லெபனானில் அமைதியை ஏற்படுத்துவிதமாகவும் பிரான்ஸ் அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
சிரியாவைவிட மோசமான ஆபத்து லெபனான் குழம்புவது என்று ஐ.நா செயலர் ஏற்கெனவே கவலை வெளியிட்டிருந்தமை தெரிந்ததே.
போகிற போக்கில் பிரான்சியப் படைகள் லெபனானை பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் அங்கு சென்று இறங்கத் தயாராகிவிட்டதா என்ற சந்தேகத்தை இந்தப் பயணம் ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக