தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.10.12

பூமியை தாக்க வரும் விண்கற்களை அழிக்க ஏவுகணை தயாரிக்கிறோம் என்கிறது ரஷ்யா

பூமியைத் தாக்கி மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தக் கூடியவை எனக் கருதப்படும் அளவில் பெரிய விண் கற்கள் (Asteroids) விண்வெளியில் இருக்கக்கூடும்.அ வற்றை பூமிக்கு வெளியே விண்வெளியில் மறித்து வெடிக்கச் செய்வதன் மூலம் திசை திருப்பவோ அல் லது முற்றாக அழிக்கவோ கூடிய விண் ராக்கெட்டு க்களை (Space Rocket) தயாரிப்பதற்கு ரஷ்யா திட்டமி ட்டுள்ளது.இத்தகவலை ரஷ்யாவின் பிரதான ராக்கெ ட்டு மற்றும் விண்வெளி ஆய்வு அமைப்பான 'Energia' வெள்ளிக்கிழமை தெரிவித்
துள்ளது. விண்வெளியில் 'Apophis' உட்பட மிகப்பெ ரிய 3 விண்கற்களின் பயணப் பாதையான (Orbit) பூமியின் சுற்றுப் பாதையில் இன்னும் சில தசாப்தங்களில் குறுக்கிட உள்ளதாக 'விட்டலி லொப்பொட்டா' ரஷ்ய செய்தித் தாளான 'Rossiyskaya Gazeta' இற்குத் தெரிவித்துள்ளார். பூமியின் சுற்றுப் பாதைக்குள் வரும் இந்த விண்கற்கள் பூமியுடன் மோதுவதற்கான சாத்தியக் கூறு மிக அதிகமாகவே உள்ளது.

இதனால் இவற்றை வழியில் மறித்து சிதைக்காமல் விட்டால் அவை மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தக் கூடும் என்பதுடன் கடலில் இவை முழுமயாக விழுந்தால் சுனாமி ஏற்படக் கூடும் எனவும் எச்சரிக்கப் படுகின்றது. 'Apophis' இற்குச் சமனான குறுங்கோள் ஒன்றுடன் மோதி அதன் பயணப் பாதையை மாற்றுவதற்கு 70 டன் TNT வெடிமருந்துடன் கூடிய ஏவுகணை தேவைப் படுகின்றது.

2004 ஆம் ஆண்டு 'Apophis' கண்டு பிடிக்கப்பட்டது. இது பூமியிலிருந்து 30 000 Km தூரத்துக்கு வரும் போது பூமியுடன் மிக அருகில் அபாயகரமாக வரும் சாத்தியம் 2029 ஆம் ஆண்டில் ஏற்படும் எனவும் இது பூமியிலிருந்து சந்திரனுக்கான தூரத்தின் 1/10 மடங்கை விடக் குறைவான தூரம் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் 'Apophis' பூமியுடன் மோதினால் 1, 700 மெகாடன் அளவுடைய TNT வெடிப்புக்குச் சமனான வெடிப்பு நிகழும் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த விண்கல்லை திசை திருப்பக் கூடிய RD-171 ரக ஏவுகணையால் முடியும் எனவும் 'Energia' இவற்றை இன்னமும் மூன்று அல்லது ஐந்து வருடங்களில் இவற்றைத் தயாரித்து விடும் எனவும் லொபொட்டா கூறியுள்ளார்.

'லொபொட்டா' மேலும் கூறுகையில் இந்த ஏவுகணைகளைத் தாம் 'Tsar Engines' என அழைப்பதாகவும் இந்த ரக ஏவுகணைகளை இதுவரை வேறு எந்த நாடும் செய்ததில்லை எனவும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: