தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.10.12

இஸ்ரேல் அமெரிக்கா கூட்டுப்படை பயிற்சி


ஈரானுக்கு தெளிவான எச்சரிக்கையை வழங்குவதற் காக அமெரிக்கா – இஸ்ரேல் இரண்டு நாடுகளும் ஞா யிறு முதல் மூன்று வாரங்களுக்கு வான் போர் பயி ற்சியில் குதிக்க இருக்கின்றன.அமெரிக்க அதிபர் தே ர்தல் நெருங்கும் வேளையில் ஈரான் குறித்த அமெரி க்காவின் அடுத்த நிலைப்பாடு என்னவென்ற கேள் விக்கான பதிலை ஒபாமா ஆட்சி அமைதியாக வழங் க இந்த ஏற்பாடு உதவும் என்று எதிர் பார்க்கலாம்.இந் த பயிற்சியானது 38 மில்லியன் டாலர்களில் செய்ய ப்படுகிறது 3500 அமெரிக்கப்
படைகளும், 1000 இஸ்ரேலிய படைகளும் இதில் பங்கேற்கின்றன.
இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் மிகப்பெரிய வான் தாக்குதல் பயிற்சி இதுவாகும்.
அவுஸ்ரிறி சேலஞ்ச் 12 என்ற பெயரில் நடைபெறும் இந்தப் போர்ப்பயிற்சி ஈரானுக்கு எதிராக மேற் கொள்ளப்படுகிறதா இல்லை சிரியாவிற்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு பதிலடி கொடுக்க நடாத்தப்படுகிறதா என்பது தெளிவாக வரையறை செய்யப்படவில்லை.
இது நாடுகளும் சேர்ந்து படை நடவடிக்கையில் ஈடுபடுவது எப்படியென்ற பரிசோதனை முயற்சி என்று கூறப்படுகிறது.
அதேவேளை இந்த செயற்பாடு பிராந்தியத்தை முழுமையான போர் மயமாக்கும் வேலை என்ற குற்றச்சாட்டும் கிளம்பியுள்ளது.
அனைத்து குற்றச் சாட்டுக்களையும் இஸ்ரேல் மறுத்துள்ளது.
சிரியா – ஈரான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கிறார் என்று ஏற்கெனவே மிற் றொம்னி வைத்த குற்றச்சாட்டுக்கு இந்த 38 மில்லியன் டாலர் பயிற்சி பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஒரு போரை எதிர் கொள்ள வெறும் 38 மில்லியன் டாலரில் செய்யப்படும் பயிற்றி சரியான பயிற்சியாக அமையும் என்று கூற முடியாது.
அமெரிக்க வாக்காளருக்கு காதில் பூ சுற்ற இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

0 கருத்துகள்: