காமிஸ்கர்னல் கடாஃபி என அழைக்கப் படும் முன் னால் லிபிய சர்வாதிகாரிமொஹம்மர் கடாஃபியின் இளைய மகன் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சனிக்கிழமை அன்று திரிப்போலி யில் இடம்பெற்ற தாக்குதல்களில் காமிஸ் கடாஃபி கொல்லப் பட்டுள்ளார், என அல் அராபியா ஊடகம் நேற்று ஞாயிற்றுக் கிழமை செய்தி வெளியிட்டுள் ளது. இத்தாக்குதலில் இவருடன் சேர்த்து லிபிய தே சிய காங்கிரஸ்ஸின் தலைவர் மொஹம்மட் மாக் ரிஃப் உம் கொல்லப் பட்டதாக
வும் கூடத் தெரிவிக்கப் பட்டுள்ளது.இச் சம்பவம் குறித்து சவுதி நெட்வேர்க் ஊடகம் கூறுகையில், திரிப்போலியில் இருந்து 170 Km தூரத்தில் அமைந்துள்ள 'பானி வலிட்' எனும் இடத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரச படையினருக்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்றது. இதில் லிபிய இராணுவத்தின் பிரிவான 'காமிஸ் பிரிகேட்' இல் தளபதியாகப் பணியாற்றிய காமிஸ் கடாஃபி படுகாயமடைந்தார். மேலும் அரச படையினரிடம் இவர் சிக்கிய பின்னர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் மொஹம்மர் கடாஃபி கொல்லப் பட்டு சரியாக ஒரு வருடம் கழித்து மேற்கொள்ளப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக