தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.10.12

லெபனானில் சிரியாவிற்கு எதிரான ஆர்பாட்டங்கள் தயார்


கடந்த வெள்ளியன்று லெபனான் நாட்டின் உளவுப்பி ரிவு தலைவரும், படைத்துறை தலைவருமான வி ஸாம் அல் ஹசனும் அவருடன் ஏழு பேரும் கார் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர்.இவர்கள் பெ ய்ருட்டில் காரில் சென்றபோது வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் பொருத்தப்பட்டிரு ந்த சக்தி மிக்க குண்டு வெடித்ததில் இந்த அனர்த்தம் நடைபெற்றது.இந்தத் தாக்குதலின் பின்னணியில் சி ரியாவின் உளவுப்பிரிவு தொழிற்பட்டுள்ளதாக சந் தேககிக்கப்படுகிறது.இன்று
ஞாயிறு நடைபெறும் இறுதிக் கிரியைகளின்போ து லெபனானில் சிரியாவிற்கு எதிரான பாரிய ஆர்பாட்டம் நடைபெற இருக் கிறது.
லெபனானில் இருந்து கொண்டே சிரிய அதிபர் ஆஸாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹிஸ்புல்லா போன்ற குழுக்களுக்கு எதிராக இந்த ஆர்பாட்டம் சூல் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கொலையும், அதனுடன் தொடர்புபட்ட ஆர்பாட்டங்களும் லெபனானில் உள்நாட்டு போரை வெடிக்க வைத்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.
இறந்த படைத்துறைத் தலைவருடய சடலம் கடந்த 2005 சிரியாவினால் குண்டு வைத்து கொல்லப்பட்டதாகக் கூறப்படும் லெபனான் பிரதமர் ரபிக் கராரி அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இன்று மாலை அடக்கம் செய்யப்படவுள்ளார்.
லெபனானில் தெருவுக்கு தெரு ஆயுதக்குழுக்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றன, குளவிக் கூட்டில் கல்லெறிந்தது போல இங்கு கல்லெறிந்தால் மிக விரைவாக அங்கு ஓர் உள்நாட்டு போரே வெடித்துவிடும்.
சென்ற மாதம் சிரியாவை விட லெபனானில் உள்நாட்டுப் போர் வெடித்தால் அதனால் வரும் விளைவுகளே அச்சமூட்டுவதாக ஐ.நா செயலர் கூறியிருந்தமை கவனிக்கத்தக்கது.
சிரியாவிற்குள் பரவிய உள்நாட்டு கலவரம் லெபனானுக்குள் பரவும் நேரம் வந்துவிட்டது, லெபனானில் கலவரம் வெடித்தால் சிரியாவில் தனது அதிகாரத்தை தக்க வைக்கமுடியும் என்று ஆஸாட் கருதுகிறார்.
இதன் காரணமாகவே அவருடைய ஆதரவாளர் இந்தப் படுகொலையை செய்துள்ளார்கள் என்ற சந்தேகத்தை பலர் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை வரும் 26ம் திகதி ஆரம்பிக்கும் ஈதர் பண்டிகைக்காக நான்கு தினங்கள் யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிக்கலாம் என்ற பேச்சுக்களை ஐ.நா முன்னெடுத்துள்ளது.
இன்று ஐ.நாவின் சமாதான தூதுவர் லக்டார் பரகிமி ஆஸாட்டுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளார்.

0 கருத்துகள்: