தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.10.12

குவைத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல்

குவைத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. குவைத் தில் கடந்த 2009 ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 50 இடங்களுக்கான உறுப்பினர்கள் தெரி வு செய்யப்பட்டனர். ஆனால் ஆளுங்கட்சி பாராளும ன்ற உறுப்பினர்கள் மீது எதிர்க்கட்சியினர் ஏராளமா ன ஊழல் புகார்களை கூறி வந்தனர்.இது தொடர்பாக பிரதமர் நசீர் முஹம்மத் பதவி விலகினார். இருப்பி னும் ஊழல் செய்தவர்கள் மீது
நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து எதிர்க்க ட்சி உறுப்பினர்கள் தொடர் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக பல மாதங்களாக பாராளுமன்றம் செயல்படவில்லை. பாராளுமன்றத்திற்கு தேர்த ல் நடத்தக் கோரி, தொடரப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் அளித்துள்ளது.இதையடுத்து 7 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி தேர்தல் அறிவிக்கப் பட்டு உள்ளது.அறபு நாடுகளிலேயே குவைத் பாராளுமன்றம் தான் அதிகாரம் பெற்ற பாராளுமன்றமாக உள்ளது.

0 கருத்துகள்: