அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இஸ்லாத்திற்கு எதிரான குறும் திரைப்பபடத்திற்கு எதிராக ஏமனில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது அந்நாட்டு மக்கள் தா க்குதல் நடத்தியிருப்பதாக தெரிகிறது.இஸ்லாம் மத த்தினையும் முகம்மது நபி அவர்களையும் கேலி செய்யு ம் வகையிலும் வெளிவந்த அமெரிக்க திரைப்படத்தி ற்கு எதிராக ஏமன் தலைநகரமான சானாவில் உள்ள அமெரிக்க தூதரக முன் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டஏமன் மக்கள் பலர் தூதரகத்தை தாக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈடுபட்டஏமன் மக்கள் பலர் தூதரகத்தை தாக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அமெரிக்க தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினரால் தடுக்க முடியாமல் போனதாகவும், ஆர்ப்பாட்டகாரர்கள் தூதரகத்திக்குள் நுழைந்து வானகங்கள் மீது தீ வைத்து கதாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இக்கலவரத்தில் பலர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் தூதரகத்தினுள் நுழைந்த ஆர்ப்பாட்டகாரர்களை பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி வெளியேற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை எகிப்திலும் நேற்று இக்கலவரம் பரவியுள்ளதுடன் அங்குள்ள அமெரிக்க தூதரகமும் தாக்கப்பட்டிருப்பதாக தகவகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதில் அமெரிக்க தூதுவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டனர். இதற்கான விசாரனையில் ஓர் ஒருகிணைந்த குழு திட்டமிட்டு இத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லிபியாவில் நிகழ்ந்த தாக்குதலை அடுத்து அமெரிக்கா தனது இரு போர் கப்பல்களை அனுப்பியிருப்பது குறிப்பிடதக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக