இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக மதிக்கும் அண்ணல் நபிகள் நாயகத்தையும் இழிவாக சித்தரித்து படம் எடுத்தவனுக்கும் , குர்ஆனை எரித்ததோடு மட்டுமின்றி, இந்த படத்தையும் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியையும் ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்து நாளை 15.09.12 காலை 11 மணிக்கு சென்னை
அமெரிக்க துனைதூதரகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் போராட்டம் நடத்தப்பட உள்ளது
இந்த முற்றுகை போராட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
முற்றுகையின் போது அமெரிக்க அரசின் இஸ்லாமிய விரோத போக்கிற்கு எதிராகவும், நபிகளாரை இழிவுபடுத்தி படம் எடுத்த இயக்குனரையும், இதற்கு உறுதுணையாக இருந்த பாதிரியையும் கைது செய்து தூக்கில் போட வேண்டுமென்று கோஷங்களை எழுப்ப உள்ளனர் . முற்றுகை போராட்டத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் —– நிர்வாகி அவர்கள் கண்டன உரையாற்றுவார்கள்
அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து முஸ்லிம்களை சீண்டி வருவதாகவும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுவருகிறது
அமெரிக்காவில் ஆட்சியை பிடிப்பதற்காக ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் யூத சியோனிச லாபிகளுக்கு அடிபணிந்து உலகின் அமைதியை கெடுத்து வருவதாகவும் தலைமை நிர்வாகிகள் கூறினார்.
இது போன்று உலகின் அமைதியை கெடுக்கும் படத்தை தயாரித்த அதற்கு உதவி செய்த அனைத்து நபர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த போராட்டம் தலைநகரில் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தப்படும் என்றும் அமெரிக்க அரசின் மீதான எதிர்ப்பு மிகப் பெரும் மக்கள் திரளாக உருவெடுத்து அமெரிக்க அரசின் பொருட்களை ஒட்டு மொத்தமாக முஸ்லிம் உலகம் புறக்கணிக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். அதல பாதாளத்தில் கிடக்கின்ற அமெரிக்க பொருளாதாரம் இத்தகைய நிகழ்வுகளால் இன்னும் சரிவை நோக்கி செல்லும் எனவும் வருங்காலத்தில் இதற்காக எதிர்வினையை அமெரிக்க சந்திக்க நேரிடும் என்றும் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக