தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.9.12

நெதர்லாந்து நாடாளுமன்ற தேர்தல் : இஸ்லாம், அகதிகளுக்கு எதிரான கட்சி படு தோல்வி


நெதர்லாந்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்த லில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான கட்சிக ள் அமோக வெற்றி பெற்றிருப்பதுடன்,இஸ்லாம் மற் றும் அகதிகளுக்கு எதிரான இடது சாரி கட்சி படுதோ ல்வி அடைதுள்ளது.நெதர்லாந்தின் தற்போதைய பிர தமர் Mark Rutte இன் VVD லிபரல் கட்சி, நாடாளுமன்ற த்தின் மொத்தம் 150 ஆசனங்களில் 41 ஆசனங்களை பெற்று பாரிய வெற்றி பெற்றுள்ளது.தொழிலாளர் கட்சி 39 ஆசனங்களை பெற்று
இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இவ்விரு கட்சிகளும் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளிலும் பார்க்க இம்முறை அதி களவு வாக்குகள் பெற்றுக்கொண்டன. இவை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பும் கொள்கைகள் உடைய கட்சிகள் ஆகும். எனினும் இஸ்லாத்திற்கும், அகதிகளுக்கும் எதிரான கட்சி என கருதப்படும் தீவிர வலதுசாரிகட்சியான சுதந்திர கட்சி 15 ஆசனங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது.

மொத்தம் 150 ஆசனங்களில் 76 ஆசனங்களுக்கு மேல் பெற்றுக்கொண்டால் பெரும்பான்மை வெற்றி பெற முடியும். எனினும் தற்போது முதலிரு இடங்களிலும் வெற்றி பெற்ற லிபரல் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகியன கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் : Geert-Wilders (சுதந்திர கட்சி)

0 கருத்துகள்: