வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா நாட்டு வெ ளியுறவு மந்திரி பக்கத்து நாடான சோமாலியாவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அவர் சோமாலியா ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமத்தை சந்தித்துப் பேசு வதற்காக சோமாலியா தலைநகர் மொகதிசுவில் உ ள்ள ஓட்டலில் தங்கி இருந்தார். ஜனாதிபதி ஹசன் அந்த ஓட்டலுக்கு வந்து கென்யா மந்திரியுடன் பேச் சு நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக சேர்ந்து
பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது சோமாலியாவில் செயல்ப டும் ஷாபாப் என்ற தீவிரவாத இயக்கத்தினர் அந்த ஓட்டல் மீது குண்டு வைத்து தாக்குதல் நடத்தினார்கள்.
ஓட்டலில் 2 இடத்தில் குண்டு வெடித்தது. இதில் 8 பேர் பலியானார்கள். ஜனாதிபதி ஹசன், கென்யா மந்திரி ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினார்கள். பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் அங்கு குண்டு வெடித்தது பாதுகாப்பு அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சோமாலியாவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சில நாட்களுக்கு முன்புதான் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் ஹசன் முகமத் வெற்றி பெற்றார். அவர் பதவி ஏற்ற 2-வது நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட இயக்கம் அல்கொய்தா ஆதரவு பெற்றது என தெரிய வந்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக