தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.9.12

அனைத்து நாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களை அழிக்க வேண்டும். அல்கொய்தா வலியுறுத்தல்

உலக வர்த்தக மைய கட்டடம், விமானம் மோதி தகர்க்க ப்பட்ட துயர சம்பவத்தை நினைவு கூறும் நிகழ்ச்சி, கடந் த 11ம் தேதி, வாஷிங்டனில் நடந்தது. அப்போது, முஸ் லிம் மத தலைவர் முகம்மது நபி அவர்களை கேலி செய்யு ம் வகையில், தயாரான வீடியோ படம் வெளியி டப்பட்டு, முஸ்லிம் நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. எகிப்து, லிபியா நாடுகளில் பெரும் வன்மு றை வெடித்தது. லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்க ப்பட்டு, தூதர் உட்பட நான்கு பேர் பலியாயினர்.இந் நி லையில், அரபு நாடுகளிலும், மேற்கத்திய நாடுகளிலும், அமெரிக்காவுக்கு எதிராக புதிய தாக்குதல்களை மேற் கொள்ள, அல்-குவைதா போராளி அமைப்பு அழைப் பு விடுத்துள்ளது. "மத்திய கிழக்கு
மற்றும் ஆப்ரிக்க நாடு களில் உள்ள, அமெரிக்க தூதரகங்களை தாக்கி அழிக்க வேண்டும்' எனவும், அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையே, சூடானில் கார்தோம் பகுதியில், அமெரிக்க தூதரகத்தின் மீது சிலர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு, அமெரிக்கா கூறியது. ஆனால், சூடான் அரசு மறுத்து விட்டதை அடுத்து, அங்கிருந்தும், துனிசியா நாட்டில் இருந்தும், அவசியம் அல்லாத பணியாளர்களை உடனே, நாடு திரும்புமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில், பிரச்னைக்கு காரணமான வீடியோ படத்தை தயாரித்த நபரிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறிது நேர விசாரணைக்கு பின் அவர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்: