தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.9.12

பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்துக்கு முரணான 753 YouTube இணைப்புக்கள் நீக்கம்


திங்கட் கிழமை பாகிஸ்தான் அரசு அதிரடியாக 753 YouTube இணைப்புக்களை தடை செய்துள்ளது. இவ் விணைப்புக்கள்அமெரிக்காவிலும், உலகளாவிய ரீதியிலும் இஸ்லாமிய மதத்துக்கு விரோதமாக வெளியிடப்பட்ட திரைப்படம், அதன் ட்ரெயிலர் மற் றும் காட்சிகளுடன் தொடர்புடையனவாகும்.இம் மு டிவு பாகிஸ்தானின் உச்ச நீதி மன்றம் பிறப்பித்த கட் டளையின் பிரகாரம் அதன் அரச தொலைத் தொடர்பு நிறுவனத்தால் (Pakistan Telecommunication Authority - PTA) செயற்படுத்தப்பட்டது. இதன் மூலம் முக்கிய
மாக மத்திய கிழக்கு நாடுகளிலும், பாகிஸ்தானிலும், உலகம் முழுவதும் முஸ் லிம் மக்களிடையே எதிர்ப்பலைகளையும் வன்முறையையும் தூண்டிய திரைப்படம் தொடர்பான அனைத்து இணைப்புக்களும் (Link) தடை செய்யப் பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் மூத்த நீதிபதியான இஃப்திகார் மொஹம்மட் சவுத்ரி, இஸ்லாம் மதம் மீதோ அல்லது முஸ்லிம் இறை தூதரான நபிகள் நாயகம் மீதோ அவதூறைப் புகட்டும் எந்த ஒரு ஆவணத்தையும் தடை செய்யுமாறு PTA ஐ வழிநடத்தியுள்ளார். மேலும் இத் தடை நடவடிக்கையின் பின்னர் PTA தலைவர் இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வேண்டியுள்ளார்.

PTA இன் தலைமை அதிகாரி உச்ச நீதி மன்றத்துக்குப் பதிலுரைக்கையில் இஸ்லாமிய மதத்துக்கு எதிராக ஒவ்வொரு நாளும் குறைந்தது 100 புதிய வீடியோ கிளிப்புக்கள் YouTube இல் வெளியிடப்படுவதாகக் கூறியுள்ளார்.

இதேவேளை பாகிஸ்தான் அரசாங்கம் விதித்த கட்டளைப்படி PTA உம் தகவல் தொடர்பு அமைச்சும் இணைந்து இஸ்லாம் மதத்துக்கு எதிரான 122 இணையத் தளங்களை கடந்த தினங்களில் தடை செய்திருந்தது.

அமெரிக்காவில் வெளியிடப்பட்ட முஹம்மது நபி மீது அவதூறு சுமத்தும் திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக் கிழமை கராச்சியில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களில் ஒருவர் கொல்லப் பட்டதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதை விட இனி வரும் நாட்களிலும் பொது மக்கள் பெரியளவில் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நிகழ்த்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்: