முகம்மது நபி அவர்களை அவதூறாக சித்தரித்து அ மெரிக்காவில் திரைப்படமொன்று வெளியிடப்படவி ருப்பதாக குற்றம் சுமத்தி லிபியாவின் பெங்காசிநக ரில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு லிபிய மக்கள் நடத்திய கலவரங்களில், அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத்தாக்குதல் சம்பவத்தின் போது கிரனைட் தாக்கு தல் மூலம் அமெரிக்க தூதரகம் தீயிடப்பட்டுள்ளது. மேலும் லிபிய இராணுவத்தினருக்கும்,
ஆயுதம் தா ங்கிய கிளர்ச்சியாளர்களுக்கும்
இடையில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே சில மோதல்களும் வெடித்துள்ளன. சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக நேற்று இரவு, எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றிணைந்து இத்திரைப்பதற்ற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எகிப்தில் உள்ள காப்டிக் அமெரிக்க சமூக குடியிருப்புக்களில் ஏற்றப்பட்டிருந்த அமெரிக்க கொடியை அகற்றி இஸ்லாமிய கறுப்புக்கொடிகளையும் அவர்கள் ஏற்றியுள்ளனர்.ஆயுதம் தா ங்கிய கிளர்ச்சியாளர்களுக்கும்
நேற்று அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதல் நினைவு தினம் (செப்.11) அமெரிக்காவில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் இச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இணையத்தில் வெளியிடப்பட்ட ஓர் அச்சுறுத்தலான பதிவால் சினம் கொண்டு, இக்காரியங்களில் ஈடுபட்டுள்ள சிலர் அதை நியாயப்படுத்தும் முனைகிறார்கள் என அமெரிக்க வெளிவிவகார துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இச்செயலுக்கு தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார். மேலும் அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அமெரிக்கா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மற்றையவர்களின் மத நம்பிக்கைகளின் பெருமைகளை குலைக்கும் முயற்சியில் வேண்டுமென்றே ஈடுபட்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
'Innocense of Musims' எனும் குறித்த திரைப்படமே தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. எகிப்தில் பிறந்து வளரந்த கலிபோர்னியாவை சேர்ந்த சாம் பேசில் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் தனது இஸ்லாத்துக்கு எதிரான கொள்கைகளுக்காக அமெரிக்காவில் நன்கு அறிமுகமானவர். குரானை எதிர்த்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவை சேர்ந்த பாதிரியார் டெர்ஜி ஜோன்ஸ் என்பவரும் இத்திரைபப்டத்திற்கு பணியாற்றியுள்ளார்.
நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் டொடர்பில் கருத்துரைத்துள்ள இயக்குனர் சாம் பெசில், 'தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க தூதரகத்திற்கு எனது இரங்கலை தெரிவிக்கின்றேன். இதே திட்டத்தை 200 மணித்தியாலங்கள் கொண்ட சீரியல் தொடராகவே எடுக்க திட்டமிட்டிருந்தேன். இன்னமும் முழு திரைப்படத்தை விநியோகிக்கவில்லை. ட்ரெய்லர் மட்டுமே வெளியாகியிருந்தது. எனினும் இதை யார் அரேபிய மொழியில் மொழிபெயர்த்தார்கள் என்பது தெரியவில்லை' என கூறியுள்ளார்.
அவரது இணையத்தளத்திலும், சில தொலைக்காட்சிகளிலும் இத்திரைப்படத்தை பற்றிய புரோமோ பதிவிட்டதன் பின்னரே எதிர்ப்பு வலுப்பெற தொடங்கியுள்ளது.
Video : Aljazeera
0 கருத்துகள்:
கருத்துரையிடுக