தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.9.12

பாகிஸ்தானில் இரு தொழிற்சாலைகளில் தீ விபத்து : கராச்சியில் 300 இற்கும் அதிகமானோர் பலி


செவ்வாய்க்கிழமை இரவு பாகிஸ்தானின் கராச்சி ந கரில் உள்ள ஜவுளித் தொழிற்சாலையில் ஏற்பட்ட க டுமையான தீ விபத்தில் 314 பொது மக்கள் பலியான தாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தீ விபத்து ஏற்பட்டவுடன் பெரும்பாலான மக்கள் தப்பி த்து வெளியே செல்ல இயலாமல் பலியானதற்கு இ த் தொழிற்சாலைகளில் அவசர வெளியேற்றும் வச திகள் இல்லாமையும் அலாரம், மற்றும் தீயணைக் கும் கருவிகள் முறையாகப் பொருத்தப் படாமல் இ
ருந்தமையும் கூறப்படுகின்றது.இத் தீ விபத்து பாகிஸ்தானின் தொழில் கூடங்களின் பாதுகாப்பின்மையை உறுதிப் படுத்துவதாக கருதப் படும் அதேவேளை அங்கு இது போன்ற சட்ட விரோதமான தொழிற்சாலைகள் சன நெருக்கடி மிகுந்த இடங்களில் பல உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இத் தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக பலர் மாடியில் இருந்து குதித்துள்ளனர். ஜன்னலில் இரும்புக் கம்பிகள் போடப் பட்டிருந்தமையாலும் பலரால் வெளியேற முடியவில்லை. தீயை அணைப்பதற்காக அங்கு பல தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப் பட்டிருந்தன. கடந்த 10 வருடங்களில் பாகிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான விபத்தாக இது பதிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும் இத் தொழிற்சாலையை வழி நடத்தும் உரிமையாளர்கள் தப்பி ஓடியதை போலிசார் கண்டுள்ளனர். இவர்களின் பெயர் விபரங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் வெளியிட்டுள்ளதுடன் நாட்டை விட்டுச் செல்லும் தகுதியும் இவர்களுக்கு இல்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை பாகிஸ்தானின் கிழக்கு லாகூரில் ஏற்பட்ட இன்னொரு தீ விபத்தில் 25 பேர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: