தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.9.12

டிக்கெட் எடுக்காமல் விமானத்தின் அடிப்பகுதியில் ஒளிந்திருந்து பயணம் செய்தவர் கீழே விழுந்து சாவு.


லண்டனின், ஹீத்ரூ விமான நிலையத்தில், தரையிறங்கிய விமானத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் பலியானார். லண்டன், ஹீத்ரூ விமான நிலையம் அருகே உள்ள, மோர்ட் லேக் பகுதியில், போர்ட்மேன் அவென்யூ குடியிருப்பில், கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில், நேற்று
முன்தினம் காலை, திடீரென சத்தம் கேட்டது.
 
அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, 30 வயது மதிக்கத் தக்க நபர், காரின் மீது படுகாயங்களுடன் விழுந்து கிடந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஹீத்ரூ விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து, இந்த வாலிபர் கீழே விழுந்தது, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விமானத்தில் அவர், கட்டணம் இல்லாமல், திருட்டுத்தனமாக பயணித்ததாக கூறப்படுகிறது. விமானத்தின் ஒரு பகுதியில் அவர் ஒளிந்து இருந்திருக்கலாம் என்றும், போலீசார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்: