தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.9.12

அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் தலிபான்கள்? ஹிலாரி கிளிண்டன் கருத்


தலிபான் தீவிரவாத இயக்கத்தை கறுப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லைÕ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறினார்.அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாத இயக்கங்களை அந்நாடு கறுப்பு பட்டியலில் சேர்த்து வருகிறது. அந்த இயக்கங்களை சேர்ந்தவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்கி வருகிறது.

தடை செய்யப்பட்ட இயக்கங்களாக அறிவித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஹக்கானி தீவிரவாதிகள் கடந்த வாரம் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து தலிபான் தீவிரவாதிகளையும் அந்த பட்டியலில் அமெரிக்கா சேர்க்குமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து புளூர்பெர்க் ரேடியாவுக்கு பேட்டி அளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கூறியதாவது:
பாகிஸ்தானில் இருந்து ஹக்கானி நெட்வொர்க்கை சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருவதை உறுதி செய்தோம். அதன்பின்தான் ஹக்கானி தீவிரவாத கும்பலை கறுப்பு பட்டியலில் சேர்க்க முடிவெடுத்தோம். இது சரியான முடிவுதான். ஆனால், தலிபான்களை கறுப்பு பட்டியலில் சேர்க்க முடிவு எடுக்கவில்லை.
இவ்வாறு ஹிலாரி கூறினார். ஆப்கனில் உள்ள தலிபான்களுடன் அந்நாட்டு அரசும் அமெரிக்காவும் அமைதி பேச்சு நடத்தி வருகிறது. இதில் ஏற்படும் முடிவுக்கு பிறகு நடவடிக்கை எடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0 கருத்துகள்: