ஒலிம்பிக் 2012-இல் மல்யுத்த 66 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சுஷில்குமார். அரையிறுதியில் கஜகஸ்தான் வீரரை 3-1 என்ற அளவில் தோற்கடித்ததன் மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். முதலில், கஜகஸ்தான் வீரர் அதிரடியாக விளையாடி புள்ளிகள் பெற்றாலும், கடைசி நிமிடத்தில் சுஷில் குமார், கஜகஸ்தான் வீரரை பந்தாடினார். இப்போட்டியின் முடிவில் கஜகஸ்தான் வீரருக்கு காதில் காயம் ஏற்பட்டு இரத்தம் வந்தது.
இந்த போட்டி இன்று மாலை 3.15 மணிக்கு தான் முடிவடைந்தது. ஆனால், தற்போது இதுகுறித்து சர்ச்சை எழுந்துள்ளது. சுஷில் குமார் காதைக் கடித்த்தாலேயே கஜகஸ்தான் வீரருக்கு இரத்தம் வந்தது என்றும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஒரு சிலர் கூறியுள்ளனர்.
எனினும், இதுகுறித்து கஜகஸ்தான் வீரர் எதுவும் கருத்துக் கூறியதாக தகவல் வெளிவரவில்லை.ஒருவேளை, காதைக் கடித்து காயப்படுத்தியது நிரூபிக்கப்பட்டால், பதக்கம் பறிக்கப்படும் வாய்ப்பு கூட உள்ளது.
கீழ்வரும் படங்களைப் பார்த்தால் அவர் காதைக் கடிக்கவில்லை என்பதும், கஜகஸ்தான் வீரர் கீழே விழும்போது ஏற்பட்ட அழுத்தத்தால் மட்டுமே இரத்தம் வந்தது என்பதும் புரியும்.
நன்றி:அலைசெய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக