மின்சாரம் தயாரிப்பதற்கான நீர்மின் நிலைய கட்டமைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அணையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந் துள்ள நிலையில், தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய அரசு, பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது. அதற்கு பாகிஸ்தான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.இந்த அணைத் திட்டம் சர்ச்சைக்குரியது; எனவே தண்ணீரை நிரப்பும் நடவடிக் கையை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளோம்'' என்று பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாக "தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்த அணை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நீர்வளம் மற்றும் மின் திட்ட மேம்பாடு ஆணையகச் செயலாளர் முகமது இம்தியாஷ் தாஜ்வார், பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீர் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் ஜமாத் அலி ஷா, நிமூ-பாஸ்கோ திட்டத்தை மத்தியஸ்த நீதிமன்ற நடுவரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதில் தாமதம் செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை ஜமாத் அலி ஷா மறுத்துள்ளார்.
அணை கட்டுமானத் திட்டம் அறிவிக்கப்பட்ட பின், அது குறித்த தகவல்களை தருமாறு 2002-ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு கேட்டதாகவும், ஆனால், 2006-ம் ஆண்டு டிசம்பர் வரை அந்த அறிக்கையை இந்தியா தரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நதி நீரைப் பங்கீடு செய்துகொள்வது தொடர்பாக ஏற்கெனவே பலமுறை பிரச்னை ஏற்பட்டுள்ளது.
செனாப் நதியின் குறுக்கே 450 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான வசதியுடன் கட்டப்பட்ட பாஹ்லிகார் அணை கட்டுமானப் பணிக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த அணைத் திட்டத்தை மத்தியஸ்த நடுவர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று இந்தியா செயல்படுத்தியுள்ளது.
நீலம்-ஜீலம் நதியின் குறுக்கே கிஷன்கங்கா கட்டுமானப் பணிகள், பாகிஸ்தானின் எதிர்ப்பால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக