தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.8.12

லண்டனில் ஒலிம்பிக் நிறைவு நாளில் பயங்கர வெடி விபத்து


லண்டனில் ஒலிம்பிக் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நேற்று கோலாகலமாக நடந்துவந்த நேரத்தில் கிழக்கு லண்டனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. லண்டனில் கடந்த 27ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நேற்று நிறைவடைந்தன. நிறைவு விழாவில் பல்வேறு
நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், விஐபிக்கள் கலந்துகொள்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், லண்டனின் கிழக்கு பகுதியில் டேகன்ஹாம் என்ற இடத்தில் உள்ள குப்பை மறுசுழற்சி மையத்தில் நேற்று திடீர் வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது.

குப்பைகள், ரசாயனங்கள் தீப்பிடித்ததால் பல அடி உயரத்துக்கு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. புகை மண்டலமும் பரவியது. விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து, நிறைவு விழா நடக்கும் ஒலிம்பிக் பார்க் அரங்கம் 11 கி.மீ. தூரத்தில் உள்ளது. அங்கு வரை புகை மண்டலம் பரவியதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதற்கிடையில், நகரின் பல இடங்களில் இருந்தும் 200க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை. யாரும் காயமடையவும் இல்லை.

‘விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. உடனே தீ அணைக்கப்பட்டதால், ஒலிம்பிக் போட்டிகள், நிறைவு விழா எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. மறுசுழற்சி மையத்தில் இதுபோன்ற விபத்து நடப்பது இதுவே முதல் முறை’ என்று லண்டன் தீயணைப்பு அதிகாரி ரோன் டாப்சன் கூறினார்.

0 கருத்துகள்: