சென்னை: கல்லீரல் புற்றுநோய் காரணமாக சென் னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் உ யிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று மரணமடைந்தார். அவருக்கு உறுப்பு தானம் அளிக்கவிருந்த ஓட்டுன ரும் மரணம் அடைந்து விட்டதால் இன்று நடைபெ றவிருந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடை பெறவில்லை. கடந்த 7 ஆம் திகதி மும்பை மருத்து வமனையில் சேர்க்கப்பட்ட தேஷ்முக் பின்னர் சென் னைக்கு கொண்டு வரப்பட்டார். தேஷ்முக்கின் கல்லீ ரல் முழுமையாக
பாதிக்கப்பட்டு விட்டதால் அத னை நீக்கி விட்டு வேறு
பாதிக்கப்பட்டு விட்டதால் அத னை நீக்கி விட்டு வேறு
கல்லீரல் பொருத்தப்பட இருந்தது.
விலாஸ்ராவ் தேஷ்முக்கின் உயிரைக் காப்பாற்றுவதற்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் கல்லீரலை பெறுவதற்கு பல வழிகளில் முயற்சித்தார். ஆனால் அவருடைய முயற்சியும் பலனளிக்கவில்லை. விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மருத்துவமனையில் காலமானார். விலாஷ்ராவ் தேஷ்முக் மத்திய அறிவியல் தொழில் நுட்பத் துறை அமைச்சராக இருந்து வந்தார். இரு முறை மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்தவர். இவருடைய மகன் ரிதேஷ் தேஷ்முக் இந்தி நடிகராவார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக