உலகின் மிக வேகமான ஓட்ட மனிதர் என்ற பெயரை ஜமைக்காவின் குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட் மீண்டும் பதிவு செய்துள்ளார்.லண்டன் ஒலிம்பிக் போட்டியின், ஆடவர் 100மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றதன் மூலம் போல்ட் இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார். போட்டித் தூரத்தை 9.63 விநாடிகளில் நிறைவுசெய்த போல்ட் புதிய ஒலிம்பிக் சாதனையையும் நிலைநாட்டியமை விசேட அம்சமாகும்.
இப்போட்டியில் சக நாட்டவரான யுவான் பிளேக் போட்டித் தூரத்தை 9.75 விநாடிகளில் நிறைவு செய்து வௌ்ளிப் பதக்கத்தையும் 2004ஆம் ஆண்டு ஒலிம்பிக் சம்பியனான அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின் போட்டித் தூரத்தை 9.79 விநாடிகளில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக