சிரியாவில் துருக்கி எல்லையோர நகரங்களும், சிரியாவின்2-வது பெரிய தொழில் நகரமான அலெப்போவும் புரட்சி படையின் வசம் உள்ளது. அலெப்போவை மீண்டும் தங்கள் வசமாக்க கடும் சண்டை நடக்கிறது.ஜனாதிபதி ஆசாத்தின் இராணுவ போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இவை தவிர மேலும் 20 ஆயிரம் இராணுவ வீரர்கள் அலெப்போவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு அதிகாரிகளின்
உத்தரவுக்காக தயார் நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே, சிரியாவில் நேற்று நடந்த மோதல்களில் 38பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில்24 பேர் பொது மக்கள் மேலும் 10 இராணுவ விரர்களும், 4புரட்சிபடை வீரர்களும் அடங்குவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக