காவியுடை தரித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந் த விடயங்களைவிட்டு முஸ்லிம் காங்கிரஸின் தலைமையானது மௌனமாக இருக்கமுடியாது.இ வ்வாறு தெரிவித்தார் முஸ்லிம் காங்கிரஸின் தலை வர் ரவூப் ஹக்கீம்.மேலும், தமிழர் தரப்பு பதவிக்குச் சோரம் போகாமல் அசைக்கமுடியாத அரசியலைச் செய்து வருகின்றது. முஸ்லிம் சமூகம் தமது அரசி யலில் அபிவிருத்தி அரசி
யலையும், எதிர்ப்பு அரசியலையும், இணக்க அரசிய லையும் என எல்லா அரசியலையும் கலப்படம் செய்து மக்களின் ஆத்திரத்தி ற்கு உட்பட்டுள்ளது என்றும் ஹக்கீம் தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசா ரக்கூட்டத்தில் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசியவை வருமாறு
புலிகளால் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களே பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். காவியுடை தரித்துள்ள பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இந்தப் பயங்கரவாதத்தினால் வடக்கு, கிழக்கிற்கு வெளியே இருக்கின்ற முஸ்லிம்கள்தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்று வடக்கு, கிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம்களினால் நிம்மதியாகப் பள்ளிவாசல்களில் தொழுதுகொள்ளமுடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
நண்பர்கள், உறவினர்கள் என சிலர் சேர்ந்து இந்த ரமழான் மாதத்திலே வீடுகளைப் பூட்டிக்கொண்டும் தொழமுடியாத சூழல் காணப்படுகின்றது.
இவ்வாறான விடயங்களை அரசில் ஆட்சியின் ஓர் அங்கமாக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஆங்காங்கே விமர்சன ரீதியாகப் பேசமுடியாதென்றால், அதற்கான அந்தஸ்து எமக்கில்லை என்றால், எமது பாதுகாப்புக்கும், இருப்புக்கும் காட்டமான நடவடிக்கைகள் இல்லையென்றால் இவற்றை நியாயம் என்று எப்படிக் கருதமுடியும்?
இந்த விடயங்களைப் பற்றியே நான் பேசிக்கொண்டு வருகின்றேன். எமது விமர்சன ரீதியான பேச்சுகள் அரசை அதிர்ச்சியடையச் செய்துள்ளன. ஆகவே, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமது வாக்குப்பலத்தால் மேற்படி விடயங்களில் தங்களுக்கு இருக்கின்ற அதிருப்தியை இந்த அரசிற்குக் காட்டியாகவேண்டும்.
இன்று மக்கள் அபிவிருத்திகளைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அதனைத் தூக்கிப் போட்டுவிட்டு வேறு விடயங்களைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். வெற்றிலைச் சின்னத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவேண்டுமென்று கட்சியின் உயர்மட்டத்தில் அபிப்பிராயங்கள் இருந்தாலும், மரச்சின்னத்தில் வரவேண்டுமென்றே அடிமட்ட ஆதரவாளர்கள் விரும்பினார்கள் என்றார் அவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக